உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2,000 கோடி மோசடி: முக்கிய நபர் கைது

ரூ.2,000 கோடி மோசடி: முக்கிய நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: தீபக் குமார் தீரஜ்லால் தக்கர் என்பவர், சர்வதேச அளவில் சூதாட்டம் நடத்தியதாக, 2023 மார்ச் 25ல், குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள மாதவபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை கையிலெடுத்த சி.பி.ஐ., அதிகாரிகள், சர்வதேச சூதாட்ட செயல்பாடுகளில், தீபக் குமார் தீரஜ்லால் தக்கர் மூளையாகச் செயல்பட்டதை கண்டறிந்தனர்.மேலும், சிறப்பு மென்பொருள் வாயிலாக ஹவாலா சேனல்களைப் பயன்படுத்தி, 2,273 கோடி ரூபாய் அளவுக்கு, அவர் மோசடி செய்ததையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.தீபக் குமார் தீரஜ்லால் தக்கர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதை அடுத்து, குஜராத் காவல் துறை கோரிக்கையின்படி, அவருக்கு எதிராக, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ், 'ரெட் நோட்டீஸ்' பிறப்பித்தது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், தீபக் குமார் தீரஜ்லால் தக்கர் இருப்பது தெரிய வந்தது. அவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்த தகவல், குஜராத் போலீஸ், சி.பி.ஐ.,க்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்ற குஜராத் சிறப்பு போலீஸ் பிரிவினர், தீபக் குமார் தீரஜ்லால் தக்கரை கைது செய்து, குஜராத்துக்கு நேற்று அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
அக் 01, 2024 12:37

அவன் மூளை இனி லாயக்கற்றதாகா செய்ய வேண்டும். மற்ற கிரிமினல்கள் அதை பார்த்து அச்சம் கொள்ள வேண்டும்.


அப்பாவி
செப் 02, 2024 07:21

இவுரு ய்ண்மைக்குற்றவாளி இல்லை. பெரிய மீன் எங்கோ பதுங்கியிருக்கு. அப்பிடி இப்பிடின்னு நம்ம அரசியல்வாதிகள் ஸ்டேட்மெண்ட் குடுத்து இவரை விடுதலை செஞ்சுருவாங்க. இதுதான் அகில இந்திய மாடல்.


Kasimani Baskaran
செப் 02, 2024 05:59

பல மோசடிகள் கடுமையான சட்டங்கள் உள்ள அரபு நாடுகளில் கூட முடிவது அங்கு சட்டத்தின் ஆட்சி இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.


Parasumanna Sokkaiyer Kannan
செப் 02, 2024 05:27

We have celebrated 74th years of independence. Modi became Prime Minister from May, 2014. Nirmala Seetharaman is the finance minister. They were not disturbed by any body and the income tax, income tax intelegence and enforcement directorate are in their hands yet they failed to tell the nation how many such cases are still to be investigated? The opposition is opposing for nothing and they are deaf and dum in such financial looting cases and so the slogan of the BJP to eradicate the black money is a great joke.


சமீபத்திய செய்தி