மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
சித்ரதுர்கா : ஆந்திராவை சேர்ந்தவர் கோடே ரமணய்யா, 52. கர்நாடகாவின் சித்ரதுர்கா டவுனில், 'கிரவுட் கிளப் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், பங்கு சந்தையில் முதலீடு செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில், பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறினார்.இதை நம்பிய சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த 106 பேர், லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தனர். இவர்களிடம் இருந்து 4.79 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு கோடே ரமணய்யா, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, வியட்நாம் நாட்டிற்கு தப்பி சென்று விட்டார். பணம் கட்டி ஏமாந்தவர்கள் சித்ரதுர்கா சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் இவர், கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பொதுமக்களை ஏமாற்றி 210 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. கோடே ரமணய்யாவை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வியட்நாம் நாட்டில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு, கோல்கட்டா விமான நிலையத்திற்கு கோடே ரமணய்யா வந்தார். குடியுரிமை அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, அவருக்கு எதிராக லுக்- அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கோல்கட்டா விமான நிலைய போலீசார், சித்ரதுர்கா சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற சித்ரதுர்கா போலீசார், கோடே ரமணய்யாவை கைது செய்து, சித்ரதுர்கா அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago