உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் கண்ணாடி உடைத்து ரூ.33 லட்சம் அபேஸ்

கார் கண்ணாடி உடைத்து ரூ.33 லட்சம் அபேஸ்

ஹாவேரி: கார் கண்ணாடியை உடைத்து, 33 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பியது.ஹாவேரி நகரை சேர்ந்த சந்தோஷ் என்பவர், நேற்று மதியம் வீட்டின் அருகில் வங்கிக்கு சென்று, 33 லட்சம் ரூபாய் எடுத்தார். அதை காரில் வைத்து கொண்டு, வீட்டுக்கு வந்தார். காரை வாசலில் நிறுத்தி விட்டு, உள்ளே சென்றார்.இதை கவனித்த மர்ம கும்பல், கார் கண்ணாடியை உடைத்து, பணத்தை திருடி கொண்டு தப்பியோடினர். சிறிது நேரத்துக்கு பின், சந்தோஷ் வெளியே வந்த போது, பணம் திருடு போனது தெரிந்தது. வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு நபர்கள், கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிய காட்சி பதிவாகி இருந்தது.ஹாவேரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி