பட்டுக்கூடு விவசாயம் ரூ.55 கோடி ஒதுக்கீடு
சர்வதேச தரம் வாய்ந்த பட்டு மூலப்பொருட்களை வினியோகிக்கும் நோக்கில், நடுத்தர வர்க்கத்து பட்டு நுால் நெசவாளர்களுக்கு 120 அறைகள் கொண்ட, தானியங்கி ரீலிங் மையங்கள். ராம்நகர் மற்றும் சித்லகட்டா ஹைடெக் பட்டுக்கூடு மார்க்கெட் அமைக்கும் முதலாம் கட்ட பணிகள் முடிந்துள்ளன. நடப்பாண்டு 250 கோடி ரூபாய் செலவில், இரண்டாம் கட்ட பணிகள் துவக்கப்படும் மைசூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், பட்டு விவசாயிகளுக்கு உதவியாக, மைசூரில் நபார்டு ஒருங்கிணைப்பில் பட்டுக்கூடு மார்க்கெட் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளுக்கு, நியாயமான விலை கிடைக்க செய்யவும், பட்டுக்கூடு மார்க்கெட்டுகளின் தரத்தை உயர்த்தவும் ஆய்வாளர்கள் நியமனம் பட்டு விவசாயத்தை விஸ்தரிக்கவும், பட்டுக்கூடுகள் உற்பத்தியை ஊக்கப்படுத்தவும், பட்டு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு.