உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ. 59,000 மதிப்பிலான சால்வை  அணிந்த சிவகுமார்

ரூ. 59,000 மதிப்பிலான சால்வை  அணிந்த சிவகுமார்

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் 59,000 ரூபாய் மதிப்பிலான சால்வையை அணிந்ததாக கூறி, பா.ஜ., கொந்தளித்து உள்ளது.கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தோளில் சால்வை அணிந்திருக்கும் புகைப்படத்தை, கர்நாடக பா.ஜ., தனது 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று பதிவிட்டது.அந்த புகைப்படத்திற்கு கீழ், 'எங்கள் காஸ்ட்லி குமார் அணிந்திருக்கும் சால்வையின் விலை 59,000 ரூபாய்.விலைவாசி உயர்வால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாததால், ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது சோகம் அளிக்கிறது.இவ்வாறு பா.ஜ.,கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை