மேலும் செய்திகள்
ரூ. 265.44 கோடி மதிப்பு போதை பொருட்கள் அழிப்பு
30-Aug-2024
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தின் சுங்க துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:ஆகஸ்ட் 23 முதல் 30ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பெங்களூரு விமான நிலையம் வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட 5 லட்சத்து 13 ஆயிரத்து 400 வெளிநாட்டு சிகரெட், இ -- சிகரெட்டுகள், 43 மடிக்கணினிகள், 16 ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 3 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் ஆகும். கடத்தி வந்த 31 பயணியரிடம் விசாரணை நடக்கிறது.கடந்த 31ம் தேதி கொழும்பில் இருந்து பெங்களூருக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, விமானத்தில் வந்த பயணியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.மூன்று பயணியர் மீதான சந்தேகத்தால், அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரித்த போது, ஆசன வாயில் மறைத்து தங்கம் கடத்தியதை ஒப்பு கொண்டனர். அவர்களிடம் இருந்து 1,670 கிராம் மதிப்புள்ள 1 கோடியே 19 லட்சத்து 38 ஆயிரத்து 723 ரூபாய் மதிப்பிலான, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 4 கோடியே 60 லட்சத்து 27 ஆயிரத்து 923 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் பெங்களூருக்கு கடத்தப்பட்ட, நகை, சிகரெட், லேப்டாப், ஐபோன் என 4.60 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
30-Aug-2024