உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் ஆட்சி; பா.ஜ., தலைவர் ராம் மாதவ் உறுதி!

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி; பா.ஜ., தலைவர் ராம் மாதவ் உறுதி!

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீரில் பா.ஜ., ஒருபோதும் ஆட்சி அமைக்காது என்பது கட்டுக்கதை. அது, 2014ல் முறியடிக்கப்பட்டது, 2024ல் மீண்டும் ஆட்சி அமைக்கும்' என பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் கூறினார்.அவர் கூறியதாவது:காஷ்மீர் மக்கள் ஒருபோதும் பா.ஜ.,வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முன் கூறப்பட்டது. 2014 தேர்தலில் எனக்கு இங்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பா.ஜ., வெளியில் இருந்து வந்த கட்சி என்று ஒரு வதந்தி பரவியது. அது எதிர்காலத்திலும் வெளியில் இருக்கும் கட்சி. அதாவது டில்லியின் கட்சியாக கருதப்பட்டது.ஆனால் இந்த கட்டுக்கதையை 2014ல் முறியடித்தோம். அதே போல், 2024 தேர்தலில் மீண்டும் இந்த கட்டுக்கதையை உடைக்க தயாராக வேண்டும் என கட்சி தொண்டர்களை நான் வலியுறுத்துகிறேன்.''பிரதமர் மோடி செப்டம்பர் 19ம் தேதி ஸ்ரீநகருக்கு வருகிறார். வரவிருக்கும் தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். பா.ஜ., நிச்சயமாக வரலாறு படைக்கும்,'' என்றார்.இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்ட சட்டசபை தேர்தல்களை அறிவித்திருந்தது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 01 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்.,8ம் தேதி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ