உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரா.பேட்டையில் பிரம்மோத்சவம் அசைவ உணவு விற்பனைக்கு தடை

ரா.பேட்டையில் பிரம்மோத்சவம் அசைவ உணவு விற்பனைக்கு தடை

தங்கவயல்: பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் பிரம்மோத் சவத்தை முன்னிட்டு ராபர்ட்சன்பேட்டை கீதா சாலை, பிரிட்சர்ட் சாலையில் உள்ள ஹோட்டல்களில் அசைவ உணவு விற்பனைக்கு நகராட்சி தடை விதித்துள்ளது.தங்கவயல் நகராட்சி தலைவர் இந்திரா காந்தி நேற்று அளித்த பேட்டி:தங்கவயலில் பிரசித்தி பெற்ற பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலின் பிரம்மோத்சவத்தின் போது, நடைபாதைகளில் கடைகள் வைத்து விற்பனை செய்ய டெண்டர் விடப்பட்டு வந்தது.

நடைபாதை கதைகள்

டெண்டர் எடுப்போர், ஒவ்வொரு கடையிலும் கட்டணமாக தினமும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வசூலித்து வந்தனர். இந்த கோவிலின் 90 ம் ஆண்டு பிரம்மோத்சவம் இன்று முதல் வரும் 20 ம் தேதி வரை நடக்கிறது. இம்முறை நடைபாதைகளில் இலவசமாக கடைகள் வைத்து வியாபாரம் செய்து கொள்ளலாம்.நடைபாதை வியாபாரிகளுக்கு யாரும் தொல்லை கொடுக்க கூடாது.குடிநீர் வசதிக்காக ஏழு இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்படும். முதலுதவிக்கு ஆம்புலன்ஸ் சேவையும், அவசர தேவைக்கு தீயணைப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் செய்து தரப்படும். ஒவ்வொரு கடையிலும் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். தெருக்களில் குப்பைகள் குவிவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

நகராட்சி கவனம்

தினமும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும். மொபைல் கழிப்பறைகள் அமைத்து பாதாள சாக்கடையில் இணைப்பு வழங்கப்படுகிறது.தினமும் தெருக்களில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படும். 50 தெரு மின்விளக்குகள் பொருத்தப்படும்.பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு,நகராட்சி கவனம் செலுத்தும். ராபர்ட்சன்பேட்டை கீதா சாலை, பிரிட்சர்ட் சாலையில் உள்ள ஹோட்டல்களில் அசைவ உணவு விற்பனைக்கு நகராட்சி தடை விதித்துள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை