உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 எம்.எல்.ஏ.,க்களுடன் பறந்த சம்பாய் சோரன்; பா.ஜ.,வுக்கு தாவ திட்டமா? குழப்பத்தில் கூட்டணி

6 எம்.எல்.ஏ.,க்களுடன் பறந்த சம்பாய் சோரன்; பா.ஜ.,வுக்கு தாவ திட்டமா? குழப்பத்தில் கூட்டணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் திடீரென டில்லிக்கு சென்றிருப்பது இண்டியா கூட்டணியினரிடையே பல்வேறு விவாதங்களை எழச் செய்துள்ளது.

அதிருப்தி

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட போது, முதல்வர் பொறுப்பை சம்பாய் சோரன் ஏற்றார். பின்னர், ஜாமினில் வெளியே வந்த பிறகு ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆனார். இதனால், சம்பாய் சோரன் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால், பா.ஜ.,வில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால், இந்த தகவலுக்கு சம்பாய் சோரன் மறுப்பு தெரிவித்து வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ky233voo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

டில்லி பயணம்

இந்த நிலையில், ஜார்க்கண்ட்டில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சியின் 6 எம்.எல்.ஏ.,க்களுடன் சம்பாய் சோரன் டில்லிக்கு சென்றிருப்பதாகவும், அங்கு பா.ஜ., மூத்த தலைவர்களை சந்தித்து, பா.ஜ.,வில் இணை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பு

இதற்காக, நேற்றிரவு கொல்கத்தாவில் எம்.எல்.ஏ.,க்களுடன் சம்பாய் சோரன் தங்கியதாகவும், அங்கு மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுடன் சம்பாய் சோரன் ஏற்கனவே தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சொந்த காரணங்களுக்காகவே டில்லி செல்வதாக சம்பாய் சோரன் கூறியுள்ளார்.

அதிர்ச்சி

சம்பாய் சோரனின் இந்த விளக்கம் கொடுத்திருந்தாலும், அடுத்து என்ன நடக்குமோ? என்ற சந்தேகமும், அச்சமும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் இண்டியா கூட்டணியினரிடையே எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

rengaraju seenivasan
ஆக 19, 2024 17:01

தெலங்கானாவில் பி எஸ் ஆர் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தால் அசங்கிகள் வாயில் பூட்டு தொங்கும். ஆனால் யாராவது பி ஜே பி யில் சேர்ந்தால் அசங்கிகளுக்கு வாய் லவுட் ஸ்பீக்கராக மாறி காது வரை நீளும் ?


K. Loganathan Kanthan
ஆக 19, 2024 08:57

எங்கே ஜனநாயகம்


K. Loganathan Kanthan
ஆக 19, 2024 08:55

ஆட்டம் ஆரம்பம்.... எங்கே jananayagam


Karunakaran
ஆக 18, 2024 16:05

ஜனநாயகத்தை கேள்வி குறியாகும் இச்செயல் மிகவும் கவலைக்குரியது. ஒரு குறிப்பிட்ட கட்சியில் நின்று வெற்றி பெட்ர பிறகு , மாற்று கட்சியில் சேர்வது ஏற்புடையது அல்ல. அவ்வாறு செல்ல விரும்பினால் , வெற்றிபெற்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு , தங்களை கூப்பிட்ட கட்சியில் சேர்வதுதான் நல்ல முறையாகும். அவ்வாறு செய்யவில்லை எனில் , கட்சிதாவால் , சட்டத்தின்படி கட்சி தாவியவர்களுக்கு , பதவி செல்லாதென அறிக்கை வேண்டும்.


r.thiyagarajan
ஆக 18, 2024 14:22

Good move


SRIRAMA ANU
ஆக 18, 2024 13:46

வீச்சு பிஜேபிக்கு தாவத் திட்டம் என்று எழுதாதே. பேரம் முடிந்து விட்டது கிளம்பி விட்டார்கள். அடுத்தவர் கட்டிய வீட்டில் குடி போவதே இந்த சங்கிகளுக்கு வேலை. அதனால்தான் இந்த வாட்டி அடுத்தவர் தைரியம் ஆட்சி நடத்த வேண்டிய அவலம் வந்தது...


Kumar Kumzi
ஆக 18, 2024 14:14

இன்னும் சவுண்டு கதரனும் ஓசிகோட்டர் கொத்தடிமை டில்லிக்கு கேக்கலையாம்


SRIRAMA ANU
ஆக 18, 2024 13:42

அடுத்தவர்களின் சொத்தை ஆட்டை போடுவதே இந்த சங்கைகளுக்கு வேலையாக போய் விட்டது.


Kumar Kumzi
ஆக 18, 2024 14:12

திருட்டு திராவிஸ கிருமிகளின் குலத்தொழில் தானே ஆட்டய போடுறது ஓசிகோட்டர் கொத்தடிமையே


Kumar Kumzi
ஆக 18, 2024 14:20

ஓவாவுக்கு ஓட்டு போடுற பரம்பரை கொத்தடிமை பேசுறாயா ஹாஹாஹா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை