உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என கூறுவது... மூர்க்கத்தனம்! இண்டியா கூட்டணி குற்றச்சாட்டுக்கு நிர்மலா பதிலடி

பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என கூறுவது... மூர்க்கத்தனம்! இண்டியா கூட்டணி குற்றச்சாட்டுக்கு நிர்மலா பதிலடி

''பட்ஜெட் உரையில் மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றால், அந்த மாநிலத்திற்கு நிதியே ஒதுக்கப்படவில்லை; அந்த மாநிலம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாமா குறை கூறுவது? என்ன ஒரு மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு இது,'' என்று எதிர்க்கட்சிகளை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளாசினார்.லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பீஹார் மற்றும் ஆந்திராவுக்கு மட்டுமே நிறைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்ற மாநிலங்கள் அனைத்துமே புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.இந்நிலையில் நேற்று ராஜ்யசபா கூடியதும், காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:பட்ஜெட்டில், சில மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைத்துள்ளது; பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை. இது பாரபட்சமானது. இந்த மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அரசியல் வியூகம்

அனைவருக்குமான உணவு தட்டுகள் காலி செய்யப்பட்டு, இரண்டு தட்டுகளில் மட்டும் பக்கோடாவும், ஜிலேபியும் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், ஒடிசா என எந்த மாநிலங்களுக்கும் நிதி தரப்படவில்லை.நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக, இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் நிதி தரப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. சமமான நிதி பங்கீடு இல்லையெனில், நாடு எப்படி சீரான வளர்ச்சி பெற முடியும்?எந்தெந்த மாநிலங்கள் பா.ஜ.,வை எதிர்க்கின்றனவோ அந்த மாநிலங்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது, சரியான போக்கு அல்ல. இன்று உங்களிடம் இருக்கும் அதிகாரம், நாளை வேறு கைகளுக்கு மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள காங்., -- தி.மு.க., திரிணமுல் காங்., சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே சிவசேனா, ஆம் ஆத்மி, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்., என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்தன.அப்போது சபை தலைவர் ஜக்தீப் தன்கர், ''சபை அலுவல்களுக்கு இடையூறு விளைவிப்பதையே, தங்கள் அரசியல் வியூகமாக வைத்திருப்பது, ஜனநாயகத்திற்கு ஆபத்து. அதுதான் தற்போது நடந்துள்ளது,'' என்றார்.இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:என் பதிலைக்கூட கேட்காமல் வெளிநடப்பு செய்வது, ஜனநாயத்திற்கு அழகல்ல. பட்ஜெட் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

அவசியம் இல்லை

நான் என் உரையில், இரண்டு மாநிலங்களை மட்டுமே குறிப்பிட்டதாகவும், நிறைய மாநிலங்களை குறிப்பிடவே இல்லை என்கிறார். பட்ஜெட் உரை என்ன என்பது, அவருக்கு நன்கு தெரியும்.பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ். பல பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளது. அனைத்து பட்ஜெட்டுகளிலும், எல்லா மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை.கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலும், தற்போது தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், நான் நிறைய மாநிலங்களை குறிப்பிடவே இல்லை. உதாரணமாக, நான் மஹாராஷ்டிர மாநிலத்தின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த இரண்டு பட்ஜெட்களுக்கும் இடையில், அம்மாநிலத்திற்காக முக்கிய முடிவை எடுத்துள்ளது.வாத்வன் என்ற இடத்தில் மிகப்பெரிய துறைமுகம் கட்டுவதற்கான முடிவு அது. 76,000 கோடி ரூபாய் அந்த திட்டத்திற்காக அறிவிக்கப்பட்டது. மஹாராஷ்டிராவின் பெயரை, இடைக்கால பட்ஜெட்டில் கூறவில்லை என்பதால், அந்த மாநிலம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகிவிடுமா.

சவால்

பட்ஜெட் உரையில் மாநிலத்தின் பெயர் இல்லையெனில், மத்திய அரசின் நிதி, திட்டங்கள் என, எதுவுமே அம்மாநிலத்திற்கு கிடைக்கவில்லை என்று ஆகிவிடாது. இது அபத்தமானது.எனவே, இது வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்ட மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு. அந்த மாநிலங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக, காங்கிரஸ் இதைச் செய்கிறது.நான் சவால் விடுகிறேன். இதுவரை காங்கிரஸ் தாக்கல் செய்த பட்ஜெட்களில் எல்லாம், அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பேசியிருப்பதாக காட்டுவரா?பட்ஜெட்டை குறை சொல்லும் திரிணமுல் காங்., கடந்த 10 ஆண்டுகளாக அம்மாநிலத்திற்கு பிரதமர் அளித்த திட்டங்களை எல்லாம் அமல்படுத்தாமல் விட்டனரே. அதற்கு என்ன பதில்.இவ்வாறு அவர் பேசினார்.காலையில் இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், பார்லிமென்டின் பிரதான வாயிலான மகர் துவார் முன் கூடினர். மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும், கைகளில் போஸ்டர்களை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் மற்றும் இண்டியா கூட்டணியின் எம்.பி.,க்கள் பலரும், நுழைவாயிலின் படிக்கட்டுகளில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.'எதிர்க்கட்சிகளின் மாநிலங்களை வஞ்சிக்காதே; நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்; தேசிய ஜனநாயக கூட்டணி பட்ஜெட் வேண்டாம்; மத்திய அரசு பட்ஜெட் வேண்டும்; கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்காதே; எங்கள் நிதி உரிமையை பறிக்க நீ யார்?' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை துாக்கி பிடித்தபடியும், கோஷங்கள் போட்டபடியும் நின்றனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் லோக்சபாவுக்குள் சென்றதும், இதே பிரச்னைக்காக குரல் கொடுத்தனர். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு தங்களுக்கு பேச அனுமதிக்கும்படி கேட்டனர். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா மறுக்கவே, இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.ஆர்ப்பாட்டம் தொடர்பான படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளதாவது:நாட்டின் கூட்டாட்சி தர்மத்தை உடைத்துள்ளனர். நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக, பெரும்பாலான மாநிலங்களை புறக்கணித்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டமும் வெளிநடப்பும்

- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Sankaran Kumar
ஜூலை 27, 2024 22:13

BJP was there in power for last 10 years. Before that Congress was ruling with the support of DMK. Naidu and Nitish are able to bring special funds to their States due to their support to BJP because of the bargaining power. Leave Nirmala Seetharaman as she won Rajya Sabha from Karnataka and not from Tamil Nadu. Tell me what DMK did for Tamil Nadu during their rule with Congress till 2014. Even in worst hit of Thane cyclone Congress did not provide single penny relief to Tamil Nadu. Madam Jayalalithaa provided the relief to the people within the state resources and not from the central government. DMK is the only party in India which never bothers about the own people.


C janarthanan
ஜூலை 26, 2024 20:34

நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுவது 100/100 சரியான பதில்.


Sittaraman Natesan
ஜூலை 26, 2024 04:40

முதல் முதலாக எல்லா உறுப்பினர்களும் வருமான வரி கட்டச் சொல்லுங்க. அப்புறமா மற்ற பேசுங்க.


Prakash Krishna Kumar
ஜூலை 26, 2024 02:06

பிஜேபி dictator government


ganapathy
ஜூலை 25, 2024 22:54

நெல்லை எனக்கு தொல்லை என்றவர் தான் டாக்கடர் கலைஞன் என போற்றப்பட்டார்


Easwar Kamal
ஜூலை 25, 2024 21:09

தமிழ்நாட்டில் தான் இந்த பெண்மணி பிறந்தார் என்றால் யாரும் நம்புவார்களா ? இருக்கலாம் பிஜேபிக்கு ஒரு ஸீட் கூட கிடைக்க வில்லை. அந்த ரெட்டை குழல் துப்பாக்கி இடம் pesi தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்து இருந்தால் காலத்துக்கும் பேச படுவாய். கமலா ஹாரிஸ் கூட ஏதாவது தமிழ்நாட்டுக்கு செய்வார் போல இந்த நிர்மலா எச்சிக்கையள ஒரு காகா கூட விரட்டமாட்டா போல.


ulaganathan murugesan
ஜூலை 25, 2024 20:07

நாங்க பீகார் ஆந்திரா பெயர்களைத்தான் சொல்லுவோம். அவங்க சப்போர்ட் லதான் எங்க ஆட்சி நடக்கிறது.


mothibapu
ஜூலை 25, 2024 15:05

நம்ம ஊரு பெயர் சொல்லவில்லை என்பது எல்லாம் வெட்டி பேச்சு. எல்லோரும் சேர்ந்து இந்த பாலாபோன வருமான வரியை நிறுத்துனங்க புண்ணியமா இருக்கும். நிகர வருமானித்தில் இருந்து மீண்டும் ஒவ்வரு செலவிலும் வரி செலுத்த வேண்டி உள்ளது. இதை அந்த அம்மையாருக்கும் தெரியாது, கேட்டா எனக்கு வருமானம் ஒன்றும் இல்லை என்று சொல்லுவா , தலைவிதி .


Sankar Ramu
ஜூலை 25, 2024 21:44

எல்லாம் நேரு ஆரம்பிச்சது?


R.P.Anand
ஜூலை 25, 2024 14:25

அப்படியே பெட்ரோல் மற்றும் சாராயம் GST வரம்புக்குள் வருதுன்னு சொல்லுங்க. சத்தம் போடாம வருவனுங்க.


Muthu Kumaran
ஜூலை 25, 2024 10:49

பிரிவினைவாதம் செய்ய காங்கிரஸ் அண்ட் aligns பார்ட்டி முயல்கிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை