உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிகினி உடையில் ஷூட் : தடை விதித்த போலீசார்

பிகினி உடையில் ஷூட் : தடை விதித்த போலீசார்

உடுப்பி:உடுப்பி கடற்கரையில் மாடல் ஒருவர், பிகினி உடையில், போட்டோ ஷூட் நடத்தியதை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பெண் கோபம் அடைந்தார்.உடுப்பியின், படுகெரே கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். நேற்று காலை இங்கு மாடல் பெண் ஒருவர், பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தினார். இதனால் இங்கிருந்த பொது மக்கள், சுற்றுலா பயணியர், தர்மசங்கடத்துக்கு ஆளாகினர். சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த உடுப்பி போலீசார், போட்டோ ஷூட்டை தடுத்து நிறுத்தினர். பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ள கூடாது என, அறிவுரை கூறி, மாடலையும், போட்டோ ஷூட் நடத்தியவர்களையும் திருப்பி அனுப்பினர்.போலீசாரின் செயலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நமது கலாசாரத்தை மறப்பது சரியல்ல. போலீசார் நடவடிக்கை எடுத்தது சரிதான் என, பாராட்டினர். போலீசாரின் செயலுக்கு, மாடல் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் அவர் கூறியுள்ளதாவது:கடற்கரையில் நான் போட்டோ ஷூட் நடத்திய போது, அங்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். வேறு உடை அணியும்படி கூறினர். இதே உடையில் இருந்தால், உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்துவர் என, எச்சரித்தனர்.கடற்கரை என்பது பொது இடம். இங்கு போட்டோ ஷூட் நடத்தியதில் தவறு என்ன. பிகினி உடை அணிய கூடாது என்ற சட்டம் உள்ளதா.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nagarajan D
செப் 06, 2024 09:54

யாரு உன்னை போன்றவர்களை கேட்கமுடியும்?உன்னை பெற்றவர்களையும் உன்னுடன் இருப்பவர்களையும் தான் சொல்லவேண்டும்


ramesh
செப் 03, 2024 20:57

நாளில் ஒரு பங்கு உடையுடன் ஆண்கள் முன்னிலையில் வந்துவிட்டு பிறகு ஏன் முழு உடையுடன் வரும் ஆண்களை குறை கூறுகிறீர்கள்


Raa
செப் 02, 2024 14:57

யம்மா அறிவாளியே "கடற்கரை என்பது பொது இடம்..... " என்று நீதானே சொன்னாய்... அதனால் தான் தடுத்தனர். பூமிக்கு எபோதும் சில தேவையில்லாதா பாரங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும் போல


Krishnamurthy Venkatesan
ஆக 31, 2024 11:17

நமது நாட்டிற்கு என பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளது, தயவு செய்து அதனை அழித்துவிடாதீர்கள்.


paramasivan
ஆக 31, 2024 10:28

there is no law for to wear bihini in india . but udupi is the holy place it not the miami beach ........................................................


krishnamurthy
ஆக 31, 2024 08:59

சபாஷ் போலீஸ்


புதிய வீடியோ