உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவனஹள்ளி கடைகளில் தொடர் திருட்டு ரோந்தை அதிகரிக்க மன்றாடும் வியாபாரிகள்

தேவனஹள்ளி கடைகளில் தொடர் திருட்டு ரோந்தை அதிகரிக்க மன்றாடும் வியாபாரிகள்

தேவனஹள்ளி: தேவனஹள்ளியில் கடைகளில் திருட்டு அதிகரிப்பதால், வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர். போலீசார் ரோந்து சுற்றும் இடத்திலேயே திருட்டு நடக்கிறது.பெங்களூரு புறநகரின் கெம்பே கவுடா விமான நிலையம் அருகே, தேவனஹள்ளி உள்ளது. இங்குள்ள கடைகளில், அவ்வப்போது திருட்டு நடப்பதால், உரிமையாளர்கள் பீதியில் உள்ளனர். இரவு கடையை மூடிவிட்டு, காலையில் வந்து பார்த்தால் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளதை பார்க்கலாம்.தேவனஹள்ளியின் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விஜயபுரா சதுக்கம் வரை ஏராளமான கடைகள் உள்ளன. வியாபாரமும் ஜோராக நடக்கிறது. இதே பகுதியை திருடர்கள் குறிவைத்து, கைவரிசையை காண்பிக்கின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு, நள்ளிரவு விஜயபுரா சதுக்கம் அருகில் உள்ள மொபைல் கடையின் ஷெட்டரை உடைத்து, உள்ளே புகுந்தனர்.கல்லாப்பெட்டியில் இருந்த 2,000 ரூபாய் ரொக்கம், மொபைல் போன்களை திருடினர். அதன் பக்கத்தில் இருந்த சில்லறை கடைகளிலும் புகுந்து, கிடைத்ததை சுருட்டினர்.மறுநாள் காலை, உரிமையாளர்கள் கடைக்கு வந்து பார்த்தபோது, திருட்டு நடந்திருப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நான்கு மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவ்வப்போது திருட்டு நடப்பதால், கடை உரிமையாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.போலீசார் ரோந்து உள்ள பகுதியிலேயே, திருட்டு நடக்கிறது. ரோந்தை அதிகரிக்கும்படி, போலீசாரிடம் வியாபாரிகள் மன்றாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ