உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையா ராஜினாமா பிரஹலாத் ஜோஷி கணிப்பு

சித்தராமையா ராஜினாமா பிரஹலாத் ஜோஷி கணிப்பு

ஹூப்பள்ளி: லோக்சபா தேர்தலில், கர்நாடக காங்கிரஸ் ஐந்துக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. எனவே தேர்தல் முடிவு வெளியான பின், சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார், என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளை கைப்பற்றுவோம் என, காங்கிரசார் கூறுகின்றனர். காங்கிரசாரால் ஐந்துக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. தேர்தல் முடிவு வெளியான பின், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டி வரும். இதையே அவர்கள் கட்சி எம்.எல்.ஏ., சீனிவாஸ் கூறியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி