உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்கக்கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய, ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். ஹூப்பள்ளியில் நடந்த ம.ஜ.த., உயர்மட்ட குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் குமாரசாமி இந்த அதிரடி முடிவை அறிவித்தார். ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவை, பா.ஜ., பிரமுகரான வக்கீல் தேவராஜ் கவுடாவிடம் கொடுத்ததாக, பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் 'பகீர்' தகவல் வெளியிட்டு உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ndvmzmd1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் சித்தராமையா கூறியிருப்பதாவது: பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள பிரஜ்வலை சர்வதேச போலீசார் உதவியுடன் இந்தியா அழைத்து வர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

வாய்மையே வெல்லும்!

பாலியல் புகாருக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா வாய்மையே வெல்லும் என எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ‛‛ எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டேன். தற்போது நான் பெங்களூருவில் இல்லை என்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

jayvee
மே 02, 2024 12:08

இதில் உண்மை இருக்கும்பட்சத்தில் பிஜேபி உடனே செயல்பாட்டுக்கு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் வழக்கம்போல் வாக்குகளுக்காக கண்டும் காணாமல் இருந்தால் கூட வராது


venugopal s
மே 02, 2024 09:43

கூட்டாளிகளைக் காட்டிக் கொடுப்பதில் பாஜகவினர் வல்லவர்கள்!


ராவ்ஜி
மே 02, 2024 08:14

கூமுட்டை ஜனங்க நம்புற வரைக்கும் இதுமாதிரி கடிதம் எழுதுதல் நடக்கும்.


இராம தாசன்
மே 01, 2024 22:13

அட விவரம் தெரியாத ஆளா இருக்காரே - நம்ம சுடலையை கேட்டிருந்தால் இந்நேரம் அவரே முடக்கி இருப்பாரே - இதற்கு எதுக்கு பிரதமர் கிட்ட போகணும்


Nagarajan D
மே 01, 2024 21:33

உங்க சின்ன முதலாளி அதே போன்ற ஒரு குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்,, அவருக்கும் பாஸ்ப்போர்ட் முடக்கிவிடலாமா சின்ன ஜால்ராவே பெரிய ஜால்றா உங்க கார்கே


Ramesh Sargam
மே 01, 2024 19:54

காங்கிரஸ் கட்சியில் இதுநாள்வரை யாரும் இதுபோன்ற பாலியல் புகாரில் சிக்கவில்லையா?


kulandai kannan
மே 01, 2024 19:11

குடும்ப வாரிசு கட்சிகளை வேரறுப்போம்.


ganapathy
மே 01, 2024 18:40

பொதுவெளியில் கேமரா பத்திரிக்கையாளர்கள் முன்பு இவன் காங்கிரஸ் கட்சியின் மகளிர் உறுப்பினரின் இடுப்பை கிள்ளி தொப்புளில் விரலைவிட்டு நோண்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் ஒரு முதல்வரா இவன் மக்களின் முன் செய்த செயல் இது இதுக்காக பிரதமர் இவனோட எதையெயல்லாம் முடக்கலாம்?


Kasimani Baskaran
மே 01, 2024 18:00

நாடகம் போடுவதில் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை


N Sasikumar Yadhav
மே 01, 2024 16:56

அவர்களுக்கு பாஸ்போட் முடக்கும் வேலையை விசாரணை அதிகாரிகள் செய்வார்கள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ