உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிசோடியாவுக்கு மே 30 வரை காவல்

சிசோடியாவுக்கு மே 30 வரை காவல்

புதுடில்லி:கலால் ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கலால் கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்றக்காவலை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நேற்று உத்தரவிட்டார்.மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வாதங்கள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை கருத்தில் கொண்டு, வழக்கு விசாரணையை 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.சிறையில் இருந்து சிசோடியா வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை