உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமாரை மாற்ற வேண்டும் அமைச்சர் ராஜண்ணா சூசகம்

சிவகுமாரை மாற்ற வேண்டும் அமைச்சர் ராஜண்ணா சூசகம்

பெங்களூரு, : 'கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை மாற்ற வேண்டும்' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா மறைமுகமாக வலியுறுத்தினார்.காங்கிரசில், துணை முதல்வர் பதவிக்கு பல்வேறு சமுதாயத்தினர் முட்டி மோதுகின்றனர். கூடுதல் துணை முதல்வர் பதவியை உருவாக்கும்படி வலியுறுத்தி, கட்சி மேலிடத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகின்றனர். இதற்கிடையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி மீதும், சிலர் கண் வைத்துள்ளனர். அமைச்சர் ராஜண்ணாவும், மாநில காங்., தலைவர் பதவிக்கு, 'துண்டு' போடுகிறார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:அனைத்து சமுதாயங்களிலும், மாநில தலைவராகும் தகுதி கொண்டவர்கள். லிங்காயத் தலைவர்கள், மாநில காங்., தலைவர் பதவியை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.சித்தராமையாவை முதல்வராக்கும் போது, கட்சி மேலிட தலைவர்கள் என்ன கூறினர். முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக சிவகுமாரையும் தேர்வு செய்தனர். லோக்சபா தேர்தல் முடியும் வரை, சிவகுமார் மாநில தலைவராக இருப்பார் என, கூறியிருந்தனர். இதை கட்சி மேலிடத்துக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், சிவகுமாரை மாநில தலைவர் பதவியில் இருந்து மேலிடம் மாற்ற வேண்டும் என்பதையே ராஜண்ணா மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். ராஜண்ணா, முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்