உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக ஆர்வலர் கொலை வழக்கு பா.ஜ., முன்னாள் எம்.பி., விடுவிப்பு

சமூக ஆர்வலர் கொலை வழக்கு பா.ஜ., முன்னாள் எம்.பி., விடுவிப்பு

ஆமதாபாத்,: குஜராத்தில், சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா கொலை வழக்கில் இருந்து, பா.ஜ., முன்னாள் எம்.பி., டினு சோலங்கி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குஜராத்தில் பா.ஜ., - எம்.பி.,யாக இருந்த டினு சோலங்கி, 67, தொடர்புடையதாக கூறப்படும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்த, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், அமித் ஜெத்வா என்பவர் தகவல்களை கேட்டு விண்ணப்பித்தார். இவர், 2010 ஜூலை 20ல், குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை, 2012 செப்டம்பரில், சி.பி.ஐ.,க்கு குஜராத் உயர் நீதிமன்றம் மாற்றியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2013 நவம்பரில், டினு சோலங்கி, அவரது மருமகன் சிவ சோலங்கி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.கடந்த 2019 ஜூலையில் டினு சோலங்கி, அவரது மருமகன் சிவ சோலங்கி உட்பட ஏழு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், 2021 செப்டம்பரில், டினு சோலங்கியின் தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.இந்நிலையில், இந்த வழக்கு, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா, விமல் கே.வியாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில் முழு விசாரணையும் செயலற்றதாக உள்ளது. வெறும் பெயரளவுக்கு விசாரணை நடந்துள்ளது. சாட்சிகளின் நம்பிக்கையைப் பாதுகாக்க அரசு தரப்பு தவறிவிட்டது. இதனால், பா.ஜ., முன்னாள் எம்.பி., டினு சோலங்கி, அவரது மருமகன் சிவ சோலங்கி உள்ளிட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2019 ஜூலையில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.V. Iyer
மே 07, 2024 03:55

எல்லா இடங்களிலும் soft target பாஜகவினரும், ப்ராமணர்களும்தான் பிராமணர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் பாஜகவினர் பெரும் சக்தியாக, பெரும்பான்மையினரின் உயிரோட்டமாக உருவெடுத்துவிட்டனர் அவர்கள் இந்த தேச விரோதிகளை கட்டம் கட்டி ஒழிப்பார்கள்


தாமரை மலர்கிறது
மே 07, 2024 00:44

தினு சோலங்கி குஜராத் மக்களிற்காக கடுமையாக ராப்பகலாக உண்ணாமல் உறங்காமல் உழைத்தவர் இவர் இருக்குக்கும்வரை, இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெறமுடியாது என்ற கடுப்பில், இவர் மீது பொய் குற்றச்சாட்டுகளை திரித்து அபாண்ட கொலை வழக்கை போட்டுள்ளனர் அமித் ஜெதவா ஒரு அக்கப்போர் பேர்வழி அவரது அக்கப்போர் பிடிக்காத சிலர் அவரை கொன்றுவிட்டார்கள் அதற்கும் பிஜேபி எம்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பது நியாயம் வெல்லும் நேர்மை வெல்லும் நீதி வெல்லும் என்று காட்டுகிறது கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு தான் என்பது போன்று பொய் குற்றச்சாட்டுகள் நிற்காது


தாமரை மலர்கிறது
மே 07, 2024 00:31

எதிர்க்கட்சிகளின் அபாண்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்றுள்ளார் நேர்மைக்கும் நீதிக்கும் வாய்மைக்கும் கிடைத்த வெற்றி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை