உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக வலைதள பிரபலம் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி

சமூக வலைதள பிரபலம் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்கட்: சுற்றுலா குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு பிரபலமடைந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண், நீர்வீழ்ச்சியில் படம் எடுத்தபோது, 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஆன்வி காம்தார், 26. இவர் சமூக வலைதளத்தில், சுற்றுலா தலங்கள் குறித்து பல பதிவுகளை வெளியிட்டு பிரபலமடைந்தவர். குறிப்பாக மழைக்கால சுற்றுலா தலங்கள் தொடர்பான தகவல்களை அதிகம் பதிவிட்டுள்ளார். இவருடைய சமூக வலைதளக் கணக்கை பலரும் பின்தொடர்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ksop0wtp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ராய்கடில் உள்ள புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சிக்கு, ஏழு நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். நேற்று காலை நீர்வீழ்ச்சி பகுதியில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, தவறி அருகில் உள்ள பள்ளத்தில் ஆன்வி விழுந்தார்.உடன் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்படி, உள்ளூர் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்தனர். இதைத் தவிர, கடலோர காவல்படை உள்ளிட்டோரும் வரவழைக்கப்பட்டனர்.செங்குத்தான 300 அடி பள்ளத்தில், ஒரு மரத்தின் கிளையில் அவர் சிக்கியிருந்தார். மீட்புப் படையினர் ஆறு மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், பள்ளத்தில் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

karthic
ஜூலை 19, 2024 11:01

முக்கியம்


Kasimani Baskaran
ஜூலை 19, 2024 05:37

ஓவராக சம்பாதிக்கும் பொருட்டு கொணட்டும் பொழுது பாதுகாப்பை உறுதி செய்வது மிக அவசியம்.


Mani . V
ஜூலை 19, 2024 03:41

பிரபலம் என்றால் அருவியில் விழமாட்டோம் என்று நினைப்பு. இப்பொழுதெல்லாம் ஒரு போனை வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட, ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று போட்டோ, வீடியோ எடுப்பது பேஷன் ஆகிப் போனது. இதுகெல்லாம் எப்பொழுது திருந்துமோ?


Sck
ஜூலை 19, 2024 07:43

இக்கால இளைஞர்கள் திருந்த வாய்ப்பே இல்ல சாமி. தருதலைதனம் அதிக அளவில் சென்று விட்டது.


Raa
ஜூலை 19, 2024 10:46

தடைசெய்யப்பட்ட இடத்தில் படம் எடுத்து சென்சார் சர்டிபிகேட்டே வாங்கறாங்களாம், இது தப்புனா, அதுவும் தானே தப்பு? out of site is out of mind... why to show in movie and expect not to there... மஞ்சுமால் பசங்களைத்தான் சொல்லறேன்.


Santharam
ஜூலை 19, 2024 03:21

அருவி என்று அழகிய தமிழில் எழுதலாமே நீர்வீழ்ச்சி என்பது "Water Fall" என்பதின் தமிழ் அர்த்தம் அன்றி தமிழ் வார்த்தை இல்லை. நன்றி.


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 11:23

நீர்வீழ்ச்சி எனக் கூறுவது தமிழின் வீழ்ச்சி.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை