மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
பெங்களூரு : குடகு, மடிகேரியை சேர்ந்தவர் கங்கம்மா, 50. இவரது மகன் அனில், 25. குடிக்கு அடிமையானவர். 2015, ஏப்ரல் 4ல் குடி போதையில் வந்த மகனை, தாய் திட்டினார். கோபமடைந்த அனில், தாயை உருட்டு கட்டையால் தாக்கினார். மருத்துவமனையில் தாய் உயிரிழந்தார்.அனிலை கைது செய்த மடிகேரி போலீசார், நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், போதிய சாட்சிகள் இல்லை. குற்றத்தை உறுதி செய்யும் வகையில், போலீசார் சாட்சிகளை தாக்கல் செய்யவில்லை என கூறி, 2017ல் அவரை விடுதலை செய்தது.கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மடிகேரி போலீசார் மேல் முறையீடு செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், அனிலை விடுதலை செய்து, கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, நேற்று ரத்து செய்தது.மேலும், 'குற்றவாளி ஏற்கனவே இரண்டு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்துள்ளார். எனவே அவருக்கு மனமாற்றம் ஏற்படும் வகையில், மூன்று மாதங்கள் வரை, அரசு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது, தோட்டத்துக்கு நீர் பாய்ச்சி பராமரிப்பது போன்ற, சமூக பணிகளை செய்து தண்டனை அனுபவிக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தது.'இவர் சமூக சேவை செய்யா விட்டால், 25,000 ரூபாய் அபராதம் செலுத்துவதுடன், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டது.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1