உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்திய சோனியா, ராகுல்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சாடல்

ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்திய சோனியா, ராகுல்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராகுலும், அவரது தாயாரும் (சோனியா) 10 ஆண்டுகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்தினர் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.லோக்சபாவில் ராகுல் பேசுகையில், ‛‛மகாபாரதத்தில் சக்கரவியூகம் அமைக்கப்பட்டு, அதில் அபிமன்யூ கொல்லப்பட்டார். சக்கரவியூகம் என்பதை பத்ம வியூகம் என்றும் கூறுவது உண்டு. அப்படியெனில், அதை தாமரை வடிவிலான வியூகம் எனலாம். இந்த 21ம் நுாற்றாண்டிலும், அதே மாதிரியான சக்கர வியூகம் அமைக்கப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், பிரகலாத் ஜோஷி கூறியதாவது: நான் ராகுல் இடம் ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். ராகுலும், அவரது தாயாரும் (சோனியா) 10 ஆண்டுகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்தினர். காங்கிரசின் ஊழலை தடுக்க எங்கள் அரசு ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் ஊழலை நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் அவர்களது ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைக்க ராகுல் இப்படி பேசுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kesavan
ஆக 03, 2024 09:26

அதனால் என்ன அந்த ஆட்சி உங்கள் ஆட்சியை விட சிறப்பாக தான் இருந்தது


T.sthivinayagam
ஜூலை 30, 2024 18:00

இந்தியாவில் வாட்ஸ்ஆப் பேஸ்புக் ஆட்சியை பிடித்த கட்சிகளும் உண்டு என மக்கள் கூறுகின்றனர்


Narayanan Muthu
ஜூலை 30, 2024 14:25

ரிமோட் கன்றோல் ஆட்சி நடந்தாலும் மக்களுக்கு நல்லது நடந்தது. இந்த மாதிரியான கேவலமான ஆட்சி ஒரு போதும் நடைபெறவில்லை. இது மக்களுக்கான ஆட்சியே இல்லை. எ1 மற்றும் எ2 க்கான ஆட்சி தான் நடக்கிறது.


Kannan
ஜூலை 30, 2024 15:51

ஆமா நீர் பார்த்திர் புண்ணாக்கு பாரத நாட்டை அடகு வச்ச ஆச்ச்சி தான் நடந்தது உனக்கு ஏதாவது இருக்காண்ணு தெரியலை


Premanathan Sambandam
ஜூலை 30, 2024 14:21

முடிந்து போனதை பேசி பிரயோஜனமில்லை. நீங்கள் தானே அதிகாரத்தில் இருக்கிறீர்கள்? சரி செய்யுங்கள். இல்லையேல் போய் விடுங்கள்


தஞ்சை மன்னர்
ஜூலை 30, 2024 14:19

ரொம்ப அறுந்துபோன பழைய டயலாக் வேறு ஏதாவது மாத்தி யோசியுங்க பாஸ்


Mario
ஜூலை 30, 2024 13:51

இப்போ என்ன நடக்குது அதை சொல்லு


Indian
ஜூலை 30, 2024 13:38

ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்தினால் என்ன தவறு ???.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ