உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு இன்று வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு இன்று வெளியீடு

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, மார்ச் 25ம் தேதி துவங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடந்தது. மாநிலம் முழுதும் 2,747 தேர்வு மையங்களில், மொத்தம், எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் எழுதினர்.அதன் பின், பாடம் வாரியாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஏப்ரல் 8ம் தேதி முதல், ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தினர். திருத்திய விடைத்தாள்களை சரிபார்த்து, கணினியில் மதிப்பெண்களை பதிவேற்றும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.தேர்வு முடிவுகளை, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பெண் வாரிய அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு, வாரிய தலைவர் மஞ்சுஸ்ரீ வெளியிடுகிறார். அதன் பின், https://karresults.nic.inஎன்ற இணைய தளத்தில் ஆன்லைன் வாயிலாக முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். நாளை காலை பள்ளி தகவல் பலகைகளில் முடிவுகள் ஒட்டப்படும்.கர்நாடகாவில் நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கு, மூன்று பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இன்று, முதல் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படுகின்றன.இதில், தேர்ச்சி பெறும் மாணவர்கள், தங்களுக்கு குறைவான மதிப்பெண் வந்துள்ளது என்று நினைத்தால், இரண்டாவது முறை மீண்டும் எழுதலாம். அதிலும், குறைவாக வந்தது என்று நினைத்தால், மூன்றாவது முறையும் எழுதலாம்.தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், இரண்டாவது, மூன்றாவது தேர்வை எழுதலாம். மதிப்பெண் சான்றிதழில், துணை தேர்வு என்று குறிப்பிடாமல், பொதுத்தேர்வு என்றே குறிப்பிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ