உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முறைத்து பார்த்த வாலிபர் கொலை 

முறைத்து பார்த்த வாலிபர் கொலை 

மைசூரு: முறைத்து பார்த்ததால் வாலிபரை கொலை செய்த, நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.மைசூரு டவுன் சாந்தி நகரில் வசிப்பவர் ஜாவித். இவரது மகன் அர்பஜ்கான், 18. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். அந்த கடைக்கு முன் நின்ற நான்கு பேரை, அர்பஜ்கான் முறைத்து பார்த்துள்ளார். இதனால் கோபம் அடைந்த நான்கு பேரும், அவரிடம் தகராறு செய்தனர். அப்பகுதி மக்கள் சமாதானம் செய்தனர்.ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த நான்கு பேரும், அர்பஜ்கானிடம் தகராறு செய்து, கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர். உயிருக்கு போராடியவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலை இறந்தார்.உதயகிரி போலீசார், நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை