உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்.டி.பி.ஐ., தலைவர் கைது

எஸ்.டி.பி.ஐ., தலைவர் கைது

புதுடில்லி; பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது, ஆட்சேர்த்தது உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை, 2022 செப்டம்பரில் மத்திய அரசு தடை செய்தது. கடந்த 2009ல் துவங்கப்பட்ட, டில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கு, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்புடன் தொடர்பு இருப்பதாக, அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த பி.எப்.ஐ., நிர்வாகி அப்துல் ரசாக் உடன், எஸ்.டி.பி.ஐ., தேசிய தலைவர் எம்.கே.பெய்சிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. எனினும் இதை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்து வருகிறது.இந்நிலையில், சட்ட விரோத பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, எஸ்.டி.பி.ஐ., தலைவர் எம்.கே.பெய்சியை, அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !