உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை சுமலதா பா.ஜ.,வுக்கு ஆதரவு

நடிகை சுமலதா பா.ஜ.,வுக்கு ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாண்டியா: மறைந்த பிரபல கன்னட நடிகர் அம்பரிஷின் மனைவி நடிகை சுமலதா, 60. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் பா.ஜ., ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு, அன்றைய முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலை தோற்கடித்தார்.இம்முறை மாண்டியா தொகுதியில் சீட் தரும்படி, பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து சுமலதா கேட்டிருந்தார். ஆனால், கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு மாண்டியா தொகுதியை பா.ஜ., ஒதுக்கியது. இங்கு குமாரசாமி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால், சுமலதா மீண்டும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என கருதப்பட்டது.இதற்கிடையில், இவரை மத்திய அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசினார். குமாரசாமியும், சுமலதாவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.இந்நிலையில், மாண்டியாவில் நேற்று நடந்த தன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ''இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்; பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்