உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை உச்ச நீதிமன்றம் தடை

ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை உச்ச நீதிமன்றம் தடை

புதுடில்லி, ஆயுர்வேதா, சித்தா மற்றும் யுனானி மருத்துவம் குறித்த தவறான விளம்பரங்களைத் தடுக்கும் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகளின், பிரிவு 170ஐ தவிர்த்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.கொரோனா பெருந்தொற்று பரவலின் போது, தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை அவதுாறு செய்து, பதஞ்சலி நிறுவனமும், யோகா குரு ராம்தேவும் வெளியிட்ட விளம்பரங்களுக்கு எதிராக, இந்திய மருத்துவர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் 2022ல் மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், 2023, ஆக., 29 தேதியிட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், 'மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள் 170ஐ மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை திரும்ப பெறும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. ஆனால், கடிதத்தை திரும்பப் பெறாத மத்திய அரசு, ஜூலை 1ம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில், ஆயுர்வேதா, சித்தா மற்றும் யுனானி மருத்துவம் குறித்த தவறான விளம்பரங்களைத் தடுக்கும் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகளின், பிரிவு 170ஐ தவிர்க்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, சந்தீப் மேத்தா அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என தெரிவித்த நீதிபதிகள், மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகளின் பிரிவு 170ஐ தவிர்க்கும்படி, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு தடை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !