உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணை; தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணை; தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னுடன் பாலியல் உறவு வைத்து, பிறகு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார்; இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ce19wd3p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், சீமான் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என கருத்து கூறியிருந்தது. மேலும், வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதையடுத்து வழக்கு விசாரணை வேகம் பிடித்தது. போலீசார், சீமானுக்கு சம்மன் அனுப்பி ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். விஜயலட்சுமியிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். வீட்டில் சம்மன் ஒட்டச்சென்றபோது, போலீசாருக்கும், சீமான் வீட்டு ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. இதையடுத்து, தன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரி, சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 03) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'புகார் அளித்த நடிகை இதற்கு முன் மூன்று முறை வழக்கை திரும்ப பெற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றுடன் அரசியல் காரணமாக வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என சீமான் தரப்பில் வாதிட்டப்பட்டது.பின்னர் நீதிபதிகள், சீமானுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். 'இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீர்ப்பை வரவேற்கிறேன்!

இது குறித்து மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: நடிகையுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை, தேவையில்லை. இந்த வழக்கு எப்படி பார்த்தாலும் அவதூறு, பொய் என்று தான் முடிவு. நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை வரவேற்கிறேன். சட்டப்படி செயல்படுவோம். இந்த தடையை நாம் விரும்பி கேட்டது தான்.உயர்நீதிமன்றத்திலேயே நாங்கள் தான் வழக்கை தொடர்ந்தோம். ஒரு முறை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சொல்கிறீர்கள். மறுபுறம் 3வது முறையாக வழக்கு தொடரும் போது திருமணம் நடந்து முடிந்தது என்று சொல்கிறீர்கள். 6 மாதத்தில் 7 முறை கரு கலைத்ததாக சொல்கிறீர்கள். 6 மாதத்தில் 7 முறை கரு கலைத்தேன் என்றால் அரிதிலும் அரிதான அவதார பிறவியாக தான் இருக்க வேண்டும். இந்த வழக்கை முற்றிலுமாக அழிக்க தான் முயற்சி செய்வோம். விசாரித்தாலும் எதிர்கொள்ள தயாராக தான் இருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை இந்திய நிலத்தில் இனி எந்த மகனுக்கும் வர கூடாது. என்னை நம்பி இருக்கிறவர்கள் எல்லாம் சிறிய பிள்ளைகள். இதனால் தான் வழக்கை முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Rajasekar Jayaraman
மார் 04, 2025 05:30

சுப்ரிம் கோர்ட் தனக்கு வேண்டாத வழக்குகளில் எல்லாம் தேவையற்ற தீர்வு கொடுத்துக்கொண்டிருக்கிறது.


மாலா
மார் 04, 2025 01:26

எதிர்பர்த்தது தான். அவன கூட்டிக்குள் கொண்டு வரும் முயற்சி


Suresh Sivakumar
மார் 04, 2025 00:06

What about the old case regarding news reader?


Easwar Kamal
மார் 03, 2025 20:42

சரியான தீர்ப்பு. இந்த பொம்பளை ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்தால் உடனே வெளியில் வருவாள் வந்து சீமான் மேல் compliant கொடுக்கவேண்டியது அப்புறம் சீமான் கொஞ்சம் அடங்கிப்போனால் உடனே இந்த பொம்பளை எங்காவது போய் ஒளிஞ்சுக்குவா. இதுதானே நடக்குது. என்னமோ இவனுங்க எலாம் எல்லாம் ரொம்ப யோகிவனுங்க. அந்த சார் இப்போ வரைக்கும் யாருனு தெரியலை. முதலில் பாலியல் தொல்லை கொடுக்கிற கூட்டத்தை கண்டு பிடிங்க. எவனாவது இளிச்ச வாயன் கிடய்ச்ச அவனை gaali பன்னிரவேண்டியது.


தாமரை மலர்கிறது
மார் 03, 2025 20:05

ஈரோட்டு ராமசாமியை சீமான் எதிர்த்தார் என்பதற்காக தமிழக அரசின் அரசியல் பழிவாங்கலை பார்த்துக்கொண்டு மத்திய அரசும் சுப்ரிம் கோர்ட்டும் சும்மா இருக்காது.


Karthik
மார் 03, 2025 21:11

அதான் கொஞ்ச நாளைக்கு பேசாம சும்மா இருங்க னு சொல்லி இடைக்கால தடை விதிச்சுடுச்சே கோர்ட்டு. அடுத்த லெட்சுமி வெடி சீசன்-05 ல இருந்து மறுபடியும் ஆரம்பிக்கும்.


Bye Pass
மார் 03, 2025 19:21

சட்டப்புத்தகங்கள் நீதிமன்றங்களுக்கு நீதிமன்றம் மாறுபடுகிறதா ?


magan
மார் 03, 2025 17:21

கரகாட்டக்காரன் கார் சீன் தான் நினைவுக்கு வருது... சொப்பன சுந்தரியை ........


Vijay D Ratnam
மார் 03, 2025 16:54

நடிகையுடனான தொடர்பு குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது திராவிட சுடர் சொன்னது போல அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல, நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்று சீமான் சொல்ல வேண்டியதுதானே. அல்லது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி எப்படி பத்மாவதி, தயாளு, ராசாத்தியை மெயின்டெய்ன் பண்ணிக்கொண்டு போனாரா அப்படி மெயின்டெய்ன் பண்ண வேண்டியதுதானே. அத்த உட்டுப்போட்டு நடுத்தெருவில் தெருநாய் சண்டை போட்டுக்கிட்டு சே. ஆமாடா அதுக்கென்ன இப்போன்னு சொன்னால் தூக்குல போடப்போறாய்ங்களா என்ன. ரெண்டு பேரையும் மெயின்டெய்ன் செய்ய வேண்டியதுதானே.


Ray
மார் 03, 2025 19:40

அண்ணா பல்கலை விவகாரத்திலும் இந்த நியாயத்தை சொல்லியிருக்கலாம்ல. குய்யோமுறையோன்னு கூக்குரலிட்டாங்களே இதுதான் ஆளுக்குத் தகுந்த நாயம்.


Rajathi Rajan
மார் 03, 2025 19:52

இவர் உங்க டாடி மோடி மஸ்தான் மாதிரி நடு தெருவில் விட்டு விட்டு போகலாம் என நினைக்கிறர் போல ரத்தினம் வாய பொத்தனும்,,,


Ray
மார் 03, 2025 20:57

அவளுடன் எந்த சம்பந்தமுமில்லையாம் ஆனால் தம்பிகள்கிட்ட சொல்லி மாதாமாதம் ஐம்பதாயிரம் கொடுக்க சொன்னாராம். அவுட் ஆப் கோர்ட் ஜீவனாம்சம் செட்டில்மென்ட் யாருக்கு? தொழில் செய்பவருக்கு. அம்மாவை எங்கே கொண்டுபோய் வச்சீங்க?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 03, 2025 21:19

திமுக கொத்தடிமைக்கு நடிகையுடனான தொடர்புக்கும் , கல்வி நிலைய வளாகத்தினுள் அத்து மீறி நுழைந்து மிரட்டி வன்புணர்வு கொள்ளும் பாலியல் வன்முறைக்கும் வேறுபாடு தெரியாதா ??


VSMani
மார் 03, 2025 16:16

இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரி, சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். என்னய்யா ஒரே குழப்பமாயிருக்கு. வழக்கை விசாரிக்க சொல்லிட்டு பின் விசாரிக்க வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்?


Karthik
மார் 03, 2025 15:34

இது நமுத்துபோன லெட்சுமி வெடிங்க. எப்ப பத்தவெச்சாலும் புஸ்ஸு.. புஸ்ஸு னு ஒரு எதிர்பார்ப்ப உண்டுபண்ணி பொசுக்குன்னு போயிடுது. Dont worry.. will meet upcoming Season 05 ..


சமீபத்திய செய்தி