உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் போலி ஜாதி சான்றிதழ் மோசடி நடப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

தமிழகத்தில் போலி ஜாதி சான்றிதழ் மோசடி நடப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

தமிழகத்தில், ஜாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.பட்டியல் இனத்தின் ஒரு பிரிவான, ஹிந்து கொண்டா ரெட்டி ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஹிந்து கொண்டா ரெட்டி

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:தமிழகத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் தன் மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூகத்துக்கான ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். தாசில்தார் முறையான விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் அல்ல என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவருக்கு ஜாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை பிரதீபா நாடினார். அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அந்த பெண்ணின் மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூக ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இதை கேட்ட நீதிபதிகள், 'தமிழகத்தில், போலி ஜாதி சான்றிதழ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த போலி சான்றிதழ் வழங்கும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய மோசடி நடப்பது தெரிகிறது.

அறிக்கை

'இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்க முடியாது. இது மிகவும் ஆபத்தானது. எனவே ஹிந்து கொண்டா ரெட்டி சமூகம் என்ற பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து, ஜாதி சான்றிதழ் தொடர்பான மாநில அளவிலான ஆய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Anand
மார் 04, 2025 13:40

ஜாதி ஒழிப்பு சுப்ரீம் கோர்ட் வரை சென்று நாறியுள்ளது.


Suppan
மார் 04, 2025 13:30

சாலைப்பெயர்களில் சாதிப்பெயர்களை நீக்கிய பொழுது ஓட்டுக்காக தேவரை மட்டும் வைத்துக்கொண்டார்கள். கிருஷ்ணமாச்சாரியை கிருஷ்ணமா என்றாக்கி கூத்தடித்தார்கள்.


sethu
மார் 04, 2025 13:13

இந்து மதத்தில் அரசு பிளவை உண்டுபண்ண மேல் முறையீடு செய்து மலிவான விளம்பரம் தேடுகிறது ஆனால் இந்து என சான்றிதழ் வாங்கியவனெல்லாம் இந்துவாக இல்லாமல் கிருத்துவனாக இன்னொரு பெயரில் கோயில்களில் வேலை கொடுத்துள்ள தி மு க அதுக்கும் இப்படி கோர்ட்டில் வழக்கு தொடுக்குமா anaukalai வேலையை விட்டு நீக்குmaa ?


Mughundhan .M Mughundhan.M
மார் 04, 2025 13:01

நீதிபதி அவர்கள் பேருக்கு பின்னால் எந்த விதமான ஜாதிப் பெயர்களும் இருக்கக் கூடாது என்று பிறப்பு சான்றிதழில் பதிவேற்ற செய்யக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.


அப்பாவி
மார் 04, 2025 12:54

எல்லாரும் பிற்பட்ட, பட்டியலின சான்றிதழ் வாங்கி படிப்பு வேலை, வாங்கிடணும்.ஆனா யாரும் ஒண்ணும் சொல்லிடக் கூடாது.


ஆரூர் ரங்
மார் 04, 2025 10:52

பெரும்பாலான BC, ST சான்றிதழ்கள் நம்பயியலாதவை. சாதி உட்பிரிவை மாற்றிக் குறிப்பிட்டு சலுகைகளை பெறுவது சர்வசாதாரணம். முக்கியமாக பலரது தூண்டுதலின் பேரில் இது நடக்கிறது.


Kovandakurichy Govindaraj
மார் 04, 2025 09:02

பெரியார் ஜாதியை ஒழித்த லட்சணம் இது தான்


GMM
மார் 04, 2025 08:47

சலுகை குடும்ப பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும். கலப்பு திருமணம் மூலம் சாதி மறைந்து விடும். ஓட்டுக்கு புது கருத்து புகுத்துகின்றனர். சாதி சமூக குழு உறவு பிணைப்பிற்கு தான் . இறுதி சடங்கை பல ஆண்டு காலமாக சாதி அமைப்புகள் தான் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய முழுவதும் பலர் பெயருக்கு பின் சாதி பெயர் உண்டு. சாதிக்குள் நிர்வாகம், நீதி புகுந்தால் குழப்பம் தான் மிஞ்சும். அரசியல் கட்சிகள் நீண்டகாலம் தீர்க்க முடியாத பிரச்னையை கையில் எடுப்பர். ஓட்டுக்கு எதையும் செய்வர். சாதி இட ஒதுக்கீடு சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்மானிக்க முடியும்.


சுராகோ
மார் 04, 2025 08:47

இதை போல ஹிந்து என்று சான்றிதழ் வைத்துக்கொண்டு கிரிஷ்டியனாக இருப்பவர்கள் பலபேர்.


sridhar
மார் 04, 2025 08:19

இது தான் உண்மையான ஜாதீய கொடுமை.


முக்கிய வீடியோ