உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்குரு பெயர்ச்சி ஹோமம்மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பிரவேசிப்பதால், பல கோவில்களில் குரு பெயர்ச்சி ஹோமம் நடத்தப்படுகிறது. நேரம்: காலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை: அலங்காரம், பிரசாதம், ஹோமம். இடம்: வலம்புரி விநாயகர் கோவில், ராமமூர்த்தி நகர் பிரதான சாலை, தொட்ட பானஸ்வாடி, பெங்களூரு.60ம் ஆண்டு விழாதிரவுபதி அம்மன் கோவில் 60ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள், நாடகம் இடம்பெறுகிறது. நேரம்: இரவு 10:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை: 'அர்ச்சுனன் தபசு' நாடகம். இடம்: திரவுபதி அம்மன் கோவில், சுதந்திர நகர், ஸ்ரீராமபுரம்.கும்பாபிஷேகம்ஜீர்ணோதாரன அஷ்டபந்தன கும்பாபிஷேகம். நேரம்: காலை 8:30 மணி: கணபதி ஹோமம்; மாலை 4:30 மணி: வாஸ்து சாந்தி, கலச பூஜை; இரவு 10:00 மணி: எந்திர ஸ்தாபனம், அஸ்ட பந்தனம். இடம்: தேவி துளிர்கானத்தம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.பஜனை உற்சவம்வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம்.பொதுகளிமண் பயிற்சி12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.கோடை பயிற்சிபட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்கைளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே -அவுட், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை