பிஜு ஜனதா தளம் எம்.பி., பா.ஜ.,வுக்கு தாவல்
புவனேஸ்வர், ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர் சுஜித் குமார். இவர், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, பிஜு ஜனதா தள தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து, தன் ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் சுஜித் குமார் நேற்று ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அக்கட்சியின் ஒடிசா மாநில பொறுப்பாளர் விஜய் பால் சிங் தோமர் ஆகியோர் முன்னிலையில் சுஜித் குமார், பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.