தமிழர் - கன்னடர் ஒற்றுமை மாநாடு பெங்களூரில் நாளை ஆலோசனை
பெங்களூரு : தமிழர் -- கன்னடர் ஒற்றுமை மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்க, பெங்களூரில் நாளை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மைசூரு, மாண்டியா, மங்களூரு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தமிழர்கள் திரளாக வசிக்கின்றனர். கன்னடர்களுடன் சகோதரர்கள் போன்று பழகுகின்றனர்.இந்நிலையில் தமிழர் -- கன்னடர் ஒற்றுமை மாநாடு அக்டோபர் 20ம் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் ஆர்வலர் எஸ்.டி., குமார் செய்து வருகிறார்.ஒற்றுமை மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்க, பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள யாதவா சங்கத்தில் நாளை மதியம் 1:30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி பல்வேறு மாவட்ட தமிழ் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், முக்கிய தமிழ் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஒவ்வொருவரின் கருத்தும் கேட்கப்படுகிறது. இதற்காக குழு அமைப்பது, மாநாட்டில் சிறப்பு மலர் வெளியிடுவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.