மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : குழந்தைகள் மீது கவனம்
16-Aug-2024
புதுடில்லி:மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.புதுடில்லி ரோகிணியில் வசிக்கும் ஒரு பெண் நேற்று முன் தினம் மாலை, தன் மூன்று வயது பெண் குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு, வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வந்து பார்த்த போது, குழந்தையைக் காணவில்லை.அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார். வீட்டருகில் உள்ள புதரில் குழந்தை மயங்கிக் கிடந்தது. அப்போது அங்கிருந்து ஒரு வாலிபன் தப்பி ஓடினான். பேகம்பூர் போலீசில் தாய் புகார் செய்தார். போலீசார் வந்து குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தையை சீரழித்த 25 வயது வாலிபரை நேற்று கைது செய்தனர்.
16-Aug-2024