சொத்து தகராறில் பயங்கரம் தந்தை - மகன் கொலை
சிக்கபல்லாபூர் : சொத்து தகராறில், தன் அண்ணன் மற்றும் அவரது மகனை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.சிக்கபல்லாபூர் குடிபன்டேவின் ஹம்பசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் முகமது பஷீர், 65. சில ஆண்டுகளாக சவுதியில் டெய்லராக பணியாற்றிய இவர், சமீபத்தில் தன் சொந்த ஊருக்கு திரும்பினார். இங்கும் டெய்லராக பணியாற்றுகிறார்.இவருக்கும், இவரது அண்ணன் மெஹபூப் சாப், 80, குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. அண்ணன் குடும்பத்தின் மீது முகமது பஷீருக்கு கோபம் இருந்தது. நேற்று அதிகாலையில் மெஹபூப் சாப், தன் மகன் நஜீர் அகமது, 55, உடன், தொழுகை செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர்களை, முகமது பஷீர், அரிவாளால் தாக்கி, துப்பாக்கியாலும் சுட்டார். இதில் நஜீர் அகமது சம்பவ இடத்திலும், அவரது தந்தை மெஹபூப் சாப், மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.தகவலறிந்து அங்கு வந்த குடிபன்டே போலீசார், முகமது பஷீரை கைது செய்தனர். சம்பவ இடத்தை எஸ்.பி., குஷால் சவுக்சே உட்பட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.