உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

பயங்கரவாதிகள் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

ஸ்ரீநகர்,ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இன்ஸ்பெக்டர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். காஷ்மீரின் ஜம்மு பகுதியில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது.இங்கு உள்ள பிர் பஞ்சால் பிராந்தியம் வனப்பகுதியையும், மலைப்பகுதிகளையும் கொண்டிருப்பதால், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள், இப்பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த 14ம் தேதி ஜம்முவின் பாட்னிடாப் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் பிடிக்கச் சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில், நம் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார்.இந்நிலையில், ஜம்முவின் உதம்பூரின் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்து, நேற்று சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில், சி.ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் குல்தீப் குமார் வீர மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை