உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

ராஜகோபுரம் கட்டட பணி எப்போது?அரசு நிதி வந்தாச்சு. முதற்கட்டமாக சுவாமிக்கு பூஜையும் நடந்தாச்சு. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிஞ்சாச்சு. ஆனாலும், வரலாறு பேசும்படி ரா.பேட்டை ஏழுமலையான் கோவிலோட 'ராஜகோபுரம்' கட்டுமான பணிகள் துவங்குவது எப்போன்னு பக்தர்கள் கனவு காண்றாங்க.வால்மீகி ஆணைய பணப் பரிமாற்றம் பெயரில் கோவில் நிதி 'ஸ்வாஹா' ஆகிடாதபடி பலரோட பார்வை சுற்றிக் கொண்டே இருக்குது. இதில், 'டிமிக்கி' கொடுக்க முடியாதுன்னு தெரியுது.காவி பின்னணியில் விழா?மைன்ஸ் தொழிலாளர்களின் பழைய பேலன்ஸ் தொகைக்கு உயிர் கொடுக்க கோர்ட்டில் உத்தரவு வாங்கி முழுசா ஒரு மாசம் முடிந்தது.தொழிலாளர்களுக்கு தீர்ப்பை விளக்கி சொல்ல சம்பந்தப்பட்ட வக்கீலான மைன்ஸ் முன்னாள் ஆபிசர் எதுக்காக மவுனமாக இருக்கிறாரோ. ஜூன் 15 ம் தேதி கோல்டு சிட்டிக்கு வரப்போறாராம். அவரையும் அரசியல்வாதிகள் போல் திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வரப்போறாங்களாம்.ஏற்கனவே இப்படி மைன்ஸ்காரங்க, பல வெற்றி ஊர்வலங்களை நடத்தி பழக்கப்பட்டவர்கள். இந்த முன்னாள் ஆபிசரையும் விட்டு வைக்காமல் வீர, சூர, பராக்கிரமச்சாலியாக அவரை தூக்கி நிறுத்தி கொண்டாட போறாங்களாம்.இதற்காக ஒரு கோஷ்டி பாராட்டுப் பொழிய தயாராகி விட்டது. இதில் அரசியல் சாயம்பூசக் கூடாதென சிலரின் கருத்தாக உள்ளது.விழா பின்னணியில் காவிக் கொடி இருக்கிறதா பேசுறாங்க. இதுக்கு 'கை' கட்சி ஆதரவாளர்கள் என்ன செய்வாங்களோ.என்ன நடிப்பு?தங்கநகர் தொகுதியில் கை காரர்களுக்கு தான் அதிகளவு ஓட்டு கிடைத்தது. சிட்டி பக்கம் புல்லுக்கட்டு, பூ, நீலக்கொடி காரங்களோட வேகம், விவேகம் எதுவும் காணாமல் போனது.ஆனால், கோல்டு சிட்டியில் காவி, பச்சை, நீலம் ஆகிய மூன்று வண்ணக்கொடி தலைவர்களுக்கு உரிய தொகையை பாகம் போட்டு பிரிச்சி கொடுத்தாங்களாம்.இந்த தொகை தலைவர்களுக்கு கிடைக்கிற தேர்தல் கால 'போனஸ்' என அவரவர் வீட்டுக்குள் போய் சேர்ந்திடுச்சாம்; தொண்டர்களை கண்டுக்கலயாம்.பெரிய தேர்தலில் வெற்றி பெற்ற புல்லுக்கட்டுகாரரோடு, முன்னாள் அசெம்பிளிக் காரர் இறுக்கத்தை காட்டுவதை சிலரால் ஏத்துக்க முடியலையாம்.இதனால், இது வெறும் வேஷமுன்னு சொன்ன முன்னாள் செங்கோட்டைக்காரர், அவரை ஒதுக்கி வைக்குமாறு கூறி உள்ளாராம்.பகல் கனவாகுமா?பெரிய தேர்தல் அறிவிப்புக்கு முன், பொன்னான சிட்டியில் அவசர அவசரமாக உணவக கட்டடத்தை 'கிரேன்' மூலம் நட்டு வெச்சாங்க. அதனை முடிப்பதற்குள் தேர்தல் நடத்தை வந்ததாலே அதன் திறப்பு விழா நடக்கல.ஜெயிக்க முடியாத கை தொகுதி லிஸ்ட்டில் உள்ள பொன்னகருக்கு இ.உணவகம் வருமா. இது பகல் கனவாக மாறிடுமான்னு எதிர்ப்பார்ப்பில் இருந்தவங்க யோசிக்கிறாங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை