தங்கவயல் செக்போஸ்ட்...!
* நிலம் பறிப்பு அரசியல்!
சட்டப்பிதா பவனுக்கு ஒதுக்கிய நிலத்தை, தற்போதைய கைக்கார அரசு பறிச்சிட்டாங்களேன்னு ஆறு மாதங்களுக்கு முன்பே ஜாதி அமைப்புகளை சேர்ந்தவங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்க.அப்போதெல்லாம் கண்டுக்காமல் போனவங்க, திடீரென சட்டப்பிதா மீது பாசப் பிணைப்பை காட்டி, புதிய அவதாரமாக பூக்காரங்களும், புல்லுக்கட்டுக்காரங்களும் வெளியே தலைகாட்ட அரசியல் ஆதாயம் தேடி வராங்க.இப்போதாவது இவர்களுக்கு சட்டப்பிதாவுக்கு ஒதுக்கிய நிலம் பற்றி தெரிய வந்திருக்குதே என விஷயம் தெரிந்தவங்க சிரிக்கிறாங்க. பூக்கார பொம்மை அரசு நிலம் கொடுத்ததை, கைக்கார அரசு பறிச்சிட்டதை அரசியல் ஆக்குவதை, 'லேட்டாக' கொண்டு வந்து உள்ளாங்க. போராடி ஒதுக்கிய நிலத்தையே மீட்க வருவாங்களா அல்லது வேறு இடம் கேட்பாங்களா.ஏற்கனவே பெமல்காரங்க, பவன் கட்ட அடிக்கல் நாட்டி, 14 வருஷம் கடந்து போனதை பற்றி கூட கேட்காமல் இருந்தவங்க, இப்போ அரசியல் நடத்துவதற்கு இவ்விஷயத்தை கையில் எடுத்து உள்ளாங்களாம்.-------* நிதி நிலை பற்றி கேள்வி!
ம.அரசின் ரெண்டு பொதுத்துறை நிறுவனங்கள் முனிசி.,க்கு பல கோடி வரி பாக்கி வெச்சிருந்தாங்க. சுகாதார பிரச்னையை காரணம் காட்டி, வரி செலுத்த தொடர்ந்து முயற்சியும் செய்தாங்க.அதனால் தான் இரண்டு பெரிய நிறுவனங்களும் வரி பாக்கியில், '12- சி'யை பல மாதங்களுக்கு முன்பே கொடுத்தாங்களாம். அந்த பெரிய தொகையில், அதிகாரத்தில் இருந்தவங்க தங்களின் இஷ்டத்துக்கு பரிமாற்றம் செய்து கொண்டாடிட்டாங்களாம்.இதுல, '4- சி' பினாமி பெயரில் 2 தவணையா போய் சேர்ந்ததாக சொல்றாங்க. ஏற்கனவே முனிசி.,யில் வீடு தோறும் கழிப்பறை கட்டினதற்கு கொடுக்க வேண்டிய பழைய பில் தொகை '3 சி'யும் கூட இந்த தொகையில் இருந்து தான், பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் ஆபீசர்கள் மூலம் தகவல்கள் பரவியிருக்குது.மொத்தம் '7 சி' காலியானதாக கூறப்பட்டாலும், மீதி தொகைக்கு வேறென்ன திட்டம் வெச்சிருக்காங்களோ.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே, 2004 பட்ஜெட்டை அறிவிச்சப்பவே, வரவு, செலவு, காட்டி இருக்கணும். அடுத்து நடக்க இருக்கும் கவுன்சில் கூட்டத்திலாவது நிதி நிலை பற்றிய கேள்வி கேட்பாங்களா அல்லது நமக்கென்ன என்றிருப்பார்களான்னு ஓட்டு போட்ட ஜனங்க கேட்கிறாங்க.--------* கமிஷனுக்கு காத்திருப்பு!
லிட்டில் இங்கிலாந்தை குப்பை நகரமாக்க போறாங்களாம். இதுக்கான அண்டர் கிரவுண்ட் வேலை நடந்துட்டு இருக்கு. எல்லாமே சிலிகான் சிட்டியின் பொறுப்பு மந்திரியின் உள்வேலை தானாம். அவரின் சொந்த தொகுதிக்கும், சிலிகான் சிட்டிக்கும் 50 கி.மீ., துாரம் கூட இல்லை. அங்க கொட்ட வேண்டியது தானே.டி.சி.எம்., தம்பியை, அசெம்பிளிக்குள்ள அனுப்புறதற்கு துடிக்கிறதாலே, அதை தெற்கு மாவட்டமா ஆக்கப் போறாராம். அதுக்காக, அங்க கொட்டாம, கோல்டு சிட்டியை நாறடிக்கலாமா.மைன்சை மூடும்போது கூட கோல்டு சிட்டியை தவிர, மாநிலத்தில் வேறு எங்கும் யாரும் எதிர்ப்புக் குரலே இல்லை. அது போல இப்போதுமா. குப்பை கொட்ட டெண்டர் விட்டு கமிஷன் ஆதாயம் பெற சிலர் காத்திருக்காங்களாம்.-----* புதிய அவதாரம்!
பேனர்கள் வைக்க நீதிமன்ற தடை உத்தரவு இருந்தாலும், பொன்னான நகரில் முனிசி.,யில் கண்டு கொண்டதாகவே தெரியல. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள் தான் விளம்பர சாதனமா இருக்குது.ஆடித்திருவிழா பேனர்கள் எல்லாம் முடிந்தது. கஜமுக மூர்த்தி விழா பேனர்களை வைத்து, அரசியல்வாதிகள் கொண்டாடுறாங்க. யாரை வணங்குவது என பக்தர்கள் அங்கலாய்க்கிறாங்க.***