உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!

மேடம் மீது பயம்!

நகராட்சிக்கு, தலைவர் இல்லாமல் 15 மாதங்கள் கடந்துள்ளது. இதுவரை வார்டுகளின் வளர்ச்சி பணிகள் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைபாடுகளை எடுத்துச் சொல்ல கவுன்சில் கூட்டமும் இதுவரை கூட்டவில்லை. எல்லாமே ஆபீசர்களின் இஷ்டப்படி தான் நடக்குது. நகரம் துர்நாற்றம் வீசுவதாக செய்திகள் வருகிறது.நகராட்சி ஆணையர் தலைமையில் கவுன்சில் கூட்டத்தை நடத்தி வார்டு குறைகளை கேட்டு தீர்க்கலாமே. கடந்த 15 மாதங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றிய விபரங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேணுமுன்னு, கை கட்சியின் மூத்த கவுன்சிலர் ஒருத்தர் கர்ஜித்திருக்கிறார்.மற்ற கவுன்சிலர்கள், ஏன் மவுனமாக இருக்காங்கன்னு பார்த்தால், அசெம்பிளி மேடம் கோபித்து கொள்வாங்களோன்னு அச்சப்படுறாங்களாம்.

சொல்வதை செய்வாரா?

பெரிய தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு, எட்டு அசெம்பிளி தொகுதிகள் மீதும் அக்கறை இருக்க வேணும். இவருக்கு ஓட்டு கொறைந்த இடம் கோல்டு சிட்டி தான். இருந்தாலும், இந்த பொன்னான நகர் தான் 'சென்ட்ரல்' அரசின் நேரடி உதவியை நம்பி இருக்கிற இடமாகும்.மத்தியில் கனரக தொழிற்சாலைகள் அமைச்சராகி இருக்கும் இவரது கட்சியின் கு.அண்ணா இடத்தில் கேட்டு, கோல்டு சிட்டியில் பெரிய தொழிற்சாலை ஏற்படுத்த போவதாக சொல்லி இருக்காரு. செங்கோட்டையில் 28 வருஷமா அங்கம் வகித்தவர், எதையுமே பெருசா சாதிக்கவில்லையேன்னு சொல்லி சொல்லி காட்டுவது தொகுதியில் மறையவே இல்லை. இவராச்சும் சொல்வதை செய்வாரான்னு பார்க்கலாமே. இன்னொரு பெரிய கனரக தொழிற்சாலை கோல்டு சிட்டியில் உதயமாகுமா.

'அவுட் போஸ்ட்' அவசியம்!

லோக் தேர்தல் நேரத்தில் ஆபீசர்களை இடமாற்றம் செஞ்சாங்க. தேர்தலுக்கு பின், அந்தந்த ஆபீசர்களை மீண்டும் இருந்த இடத்துக்கே அனுப்பிட்டாங்க. இதன்படி வட்டார நிர்வாக பெண் அதிகாரி, மறுபடியும் வந்து விட்டார்.இவர் இருக்கும் போது தான், பெண் ஊழியருக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியரின் உறவினர்கள், உள்ளே புகுந்து காமுக ஆபீசரை திணறடிச்சாங்க. அதன்பின்னரே, இடமாற்றம் என்ற பெயரில், 'கல்தா' கொடுத்தாங்களே தவிர, வழக்கு பதிவாகல.பெண் அதிகாரியான அவரு, மற்ற பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேணும்னு கேட்கிறாங்க. மினி விதான் சவுதாவுக்குள் காக்கிகளின் 'அவுட் போஸ்ட்' ஏற்படுத்த வேணுமுன்னு கோஷம் வலுத்து இருக்கு.

வெளியேற காரணம்!

கோல்டு மைன்ஸ் ஸ்பெஷல் ஆபீசராக, தமிழகத்தை சேர்ந்தவர், 2016ல் நன் மதிப்போடு தான் பதவியில் இருந்தார். இவர் பெயரை சொல்லி சிலர் 'மாபியா' வேலைகளையும் செஞ்சாங்க. இவரோட பதவிக்காலம் முடிஞ்சு போச்சு; பதவியில் நீடிக்க மேலும் 6 மாதம் 'சான்ஸ்' கேட்டு முயற்சித்தாரு.ஆனால், செக்யூரிட்டி ஆபீசருக்கும், இவருக்கும் ஏற்பட்ட பதவி சண்டை விவகாரம், ஒருவர் மீது ஒருவர் அடுக்கிய ஊழல் புகார் பட்டியல் டில்லியில் குவிந்ததால், இவர் வெளியேற்றப்பட்டாராம்.கோல்டு சிட்டியில் தமிழர் ஒருவர், அதிகாரியாக இருந்ததால் தான் உடமை சான்றிதழ் கிடைக்க காரணமாக இருந்ததாக சொல்றாங்க. ஆனால் டில்லி அமைச்சகம் ஏத்துக்கலையாமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி