உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிளினிக் நடத்திய போலி டாக்டர் சிக்கினார்

கிளினிக் நடத்திய போலி டாக்டர் சிக்கினார்

பெலகாவி, : பெலகாவியின், படகரகல்லியில், உமேஷ் ஆச்சார்யா என்பவர், பல ஆண்டுகளாக, 'சிவா கிளினிக்' நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். ஆனால் சட்டப்படி அனுமதி பெறவில்லை.இது தொடர்பாக, தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். உமேஷ் ஆச்சார்யா அனுமதி பெறாமல் கிளினிக் நடத்தியது தெரிந்தது. இவர் போலி டாக்டர் என்பதை கண்டுபிடித்தனர். கிளினிக்கில் தேவையான வசதிகள் இல்லை. மருத்துவ துறை தொடர்பான சான்றிதழும் இல்லை. கிளினிக்கில் இருந்த ஊழியர்களும் மருத்துவ கல்வி பெறவில்லை.சோதனை நடத்தப்பட்ட கிளினிக்கில், சிலர் உள் நோயாளிகளாக சேர்ந்திருந்தனர். முடி உதிர்தல், நரம்பு பலவீனம், அழகை அதிகரிப்பது உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சையளித்த ஆவணங்கள் கிடைத்துள்ளன. மருந்து, மாத்திரைகள், பொடியை நோய்களுக்கு கொடுத்துள்ளனர்.போலி டாக்டர் உமேஷ் ஆச்சார்யாவை, போலீசார் கைது செய்தனர். கிளினிக்குக்கும் சீல் வைத்தனர்.பி.யு.சி., படித்துவிட்டு கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர். கிளினிக்குக்கு பூட்டு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை