| ADDED : ஜூன் 02, 2024 11:40 PM
திருச்சூர் : கேரளாவில் வளர்ப்பு பூனை காணாமல் போனதால் ஏற்பட்ட தகராறில், தாத்தாவை பேரன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எடாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், கேசவன், 79. இவரது பேரன் ஸ்ரீகுமார். இவர் வளர்த்து வந்த செல்லப் பிராணியான பூனையை காணவில்லை. இதுகுறித்து தாத்தா கேசவனிடம் ஸ்ரீகுமார் கேட்டார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகுமார், சமையல்அறையில் இருந்த கத்தியை எடுத்து, தாத்தா கேசவனை தாக்கினார். இதில் அவர் படுகாயம்அடைந்தார். திருச்சூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் கேசவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீகுமார் மீது கொலைவழக்கு பதிவு செய்த போலீசார், அவரை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.