கடலில் விழுந்தது ஹெலிகாப்டர்; 3 வீரர்கள் மாயம்
போர்பந்தர்,: குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அரபிக்கடல் பகுதியில், கிட்டத்தட்ட 45 கி.மீ., தொலைவில் நம் நாட்டு தேசியக்கொடியுடன் கூடிய மோட்டார் டேங்கர் கப்பலில் காயமடைந்த ஒருவர் உதவி கோரினார்.அவரை மீட்க, நான்கு வீரர்களுடன் இந்திய கடலோர காவல்படையின் இலகுரக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய கடலோர காவல்படையினர், ஹெலிகாப்டரின் பாகங்களை கண்டறிந்ததுடன், காயங்களுடன் ஒரு வீரரை மீட்டனர்.மாயமான மற்ற மூன்று வீரர்களையும், நான்கு கப்பல்கள் மற்றும் இரண்டு விமானங்கள் வாயிலாக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, இந்திய கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.