உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாழ்வாக பறந்த போயிங் விமானம் இணையவாசிகள் இடையே விவாதம்

தாழ்வாக பறந்த போயிங் விமானம் இணையவாசிகள் இடையே விவாதம்

பெங்களூரு, - போயிங் விமானம் தாழ்வாக பறந்து சென்றது தொடர்பாக, இணையவாசிகள் இடையில், விவாதம் நடந்து வருகிறது.பெங்களூரு கோரமங்களாவில் வசிக்கும் ஹேமந்த் மொகபத்ரா என்பவர், சமூக வலைத்தளமான 'எக்ஸ்' பக்கத்தில் விமானம் தாழ்வாக பறந்து செல்லும் வீடியோவை பதிவிட்டார்.'உண்மை... பெங்களூரு கோரமங்களா - இந்திராநகருக்கு இடைப்பட்ட பகுதியில், தாழ்வான நிலையில் விமானம் பறந்து செல்கிறது. தரைக்கு மிக அருகில் வந்துவிட்டு, மீண்டும் உயர பறக்கிறது. இது என்ன ராணுவ பயிற்சியா?' என்று பதிவிட்டு இருந்தார்.அந்த வீடியோ பரவியது. வர்த்தக விமான போக்குவரத்தை கவனிக்கும் பிளேட்டிரடர் 24 ஆய்வின்படி, தாழ்வாக பறந்து சென்றது போயிங் 777 - 337 கே7067 விமானம் என்று தெரிந்தது. இந்த ரக விமானத்தை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவர்.விமானம் தாழ்வாக பறந்தது தொடர்பாக, இணையதளத்திலும் விவாதம் நடந்தது. விமானிகளுக்கு பயிற்சி அளிக்க, விமானம் தாழ்வான நிலையில் பறந்து இருக்கலாம் என்று ஒரு சிலர் கருத்து பதிவிட்டனர். தினமும் இதுபோன்று விமானங்கள் தாழ்வாக, பறந்து கொண்டு தான் இருக்கிறது என, ஒரு தரப்பு பதிவிட்டனர்.கோரமங்களா அருகே எச்.ஏ.எல்., விமான நிலையம் இருப்பதால், தரையிறக்குவதற்காக விமானம் தாழ்வான நிலையில், பறந்து இருக்கலாம் என்றும் கருத்துகள் உலா வருகின்றன. ஆனால் இதுகுறித்து போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்