உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தப்ப முயன்ற திருடன் போலீசார் சுட்டு பிடிப்பு 

தப்ப முயன்ற திருடன் போலீசார் சுட்டு பிடிப்பு 

ஹூப்பள்ளி : போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற திருடனை, பெண் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.தார்வாட், ஹூப்பள்ளியில் உள்ள நகைக் கடையின் இரும்பு கதவை உடைத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, நகைகள், பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இதுகுறித்து கேசுவாப்பூர் போலீசார் விசாரித்தனர். இந்த திருட்டில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்த பிரபல திருடன் பர்ஹான் ஷேக், 44 என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர், கைது செய்யப்பட்டார்.தன்னுடைய கூட்டாளிகள் தார்வாட் அருகே தாரிஹால் கிராஸ் பகுதியில் பதுங்கி இருப்பதாக, போலீசாரிடம் பர்ஹான் ஷேக் கூறினார். இதனால் நேற்று காலை, பர்ஹான் ஷேக்கை ஜீப்பில் அழைத்து கொண்டு, அவரது கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் சென்றனர். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பர்ஹான் ஷேக் கூறியதால் போலீசார், ஜீப்பை நிறுத்தினர். அப்போது திடீரென, அவர் தப்பி ஓட முயன்றார். அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் சுஜாதா, போலீஸ்காரர் மகேஷ், பர்ஹான் ஷேக்கை பிடிக்க முயன்றனர். அவர்கள் இருவரையும் தாக்கினார்.அப்போது எஸ்.ஐ., கவிதா வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, சரண் அடையும்படி, பர்ஹான் ஷேக்கிற்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் கவிதா, பர்ஹான் ஷேக்கின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்தவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி