மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
புதுடில்லி:கத்திக் குத்துக் காயங்களுடன் வீட்டில் கிடந்த ஆண் உடலை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக, அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தென்மேற்கு டில்லியின் துவாரகா தாப்ரி பகுதியில் சாணக்யா 2வது பிளேஸில் வசித்தவர் சச்சின். தனியார் நிறுவன ஊழியர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காவ்யா என்ற பெண்ணைக் காதலித்து கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்குப் பின் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 18ம் தேதி இரவு இருவருக்கு ஏற்பட்ட சண்டையில், கணவனை கத்தியால் சரமாரியாக குத்திய காவ்யா, அங்கிருந்து தப்பிச் சென்றார்.சச்சின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டில் வசிப்போர் கொடுத்த தகவலின் பேரில் நேற்று காலை வந்த போலீசார், அழுகிய நிலையில் இருந்த சச்சின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணை நடத்திய போலீசார் உத்தம் நகரில் பெற்றோர் வீட்டில் இருந்த காவ்யாவை கைது செய்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.உடற்கூறு ஆய்வுக்குப் பின், சச்சின் உடல் அவரது பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
1 hour(s) ago