மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
பெங்களூரு, : பெங்களூரில் டெங்கு அதிகம் பாதிக்கும் பகுதிகளை கண்காணிக்க, மாநகராட்சியில் ஆள் பற்றாக்குறை இருப்பது தெரிந்துள்ளது.கர்நாடகாவில் நேற்று முன்தினம் நிலவரப்படி 7,362 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரில் மட்டும் 2,083 பேருக்கு பாதிப்பு உள்ளது.டெங்கு பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தினமும், டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.இந்நிலையில் பாதிப்பு அதிகமாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பதில், மாநகராட்சியில் ஆள்பற்றாக்குறை இருப்பது தெரிந்துள்ளது.டெங்குவால் பாதிக்கப்படுவோரின் ரத்தத்தட்டுகள் அளவுகள் நிலையானதாக இருப்பதை, மாநகராட்சி டாக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். டெங்கு நோயாளிகளை கண்காணிப்பது நோயை கையாளுவதின் ஒரு முக்கியமானபடி ஆகும் என்று, பெங்களூரு மாநகராட்சி சுகாதார கமிஷனர் சுரல்கர் விகாஸ் கிஷோர் கூறியுள்ளார்.டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பி.எம்.டி.சி., நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருப்பதால், மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களில் கொசு ஒழிப்பான் மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.பணிமனைகளில் போடப்பட்டிருக்கும் டயர்களுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரும் கொட்டப்படுகின்றன.9.7.2024 / சுப்பிரமணியன்10_DMR_0016டயர்களுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரை கொட்டும் பி.எம்.டி.சி., ஊழியர்கள். இடம்: மெஜஸ்டிக் பணிமனை, பெங்களூரு.டயர்களுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரை கொட்டும் பி.எம்.டி.சி. ஊழியர்கள். இடம்: மெஜஸ்டிக் பணி மனை, பெங்களூரு.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13