உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டில் மோடி அலை இல்லை!

நாட்டில் மோடி அலை இல்லை!

பெங்களூரு: ''நாட்டில் பிரதமர் மோடி அலை இல்லை,'' என, கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் வினய்குமார் சொரகே கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடக அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்கள், காங்கிரஸ் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையை முன்வைத்து, மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்போம். எங்கள் வாக்குறுதிகள் அடிதட்டு மக்களை முன்னேற்றம் அடைய வைக்கிறது. அதற்கு கைமாறாக, மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுவர்.பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அவரவர் தொகுதிக்கு சென்று, வாக்குறுதித் திட்டம் பற்றி, பெண்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.கிரஹ லட்சுமி திட்டத்தால், பயனடைந்த பெண் ஒருவர், மாதம் 2,000 ரூபாய் சேமித்து வைத்து, குளிர்சாதன பெட்டி வாங்கி உள்ளார். இதுவே எங்கள் அரசு சாதனை.நாடு முழுவதும் காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நாட்டில் பிரதமர் மோடியின் அலை இல்லை. கர்நாடகாவில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி