மேலும் செய்திகள்
கெஜ்ரிவாலுக்கு பங்களா ஒதுக்கீடு
33 minutes ago
ரூ.6 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
1 hour(s) ago
ஹலசூரு: பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில், ஹலசூரு ஏரிக்கரையில் உள்ள நீலகண்டன் சதுக்கத்தில், 2009 ஆக., 9ல் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதன் 15ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.பெங்களூரு தமிழ் சங்க தலைவர் கோ.தாமோதரன், துணை செயலர்கள் பாரி, அமுதபாண்டியன், கோபிநாத், முன்னாள் தலைவர்கள் ரா.சு.மாறன், தி.கோ.தாமோதரன், முன்னாள் துணை தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் செயலர் ராமசுப்பிரமணியன் உட்பட சங்க நிர்வாகிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ்; மாநில தி.மு.க., பொருளாளர் தட்சிணாமூர்த்தி; தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமார்; விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ்; உரிமை குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை துணை தலைவர் ஜெயகாந்தன்.பெங்களூரு தமிழ் மன்ற தலைவர் பாஸ்கரன்; பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ராஜேந்திரன்; பாரதிநகர் பிளாக் காங்., தலைவர் சுபாஷ்; நீலசந்திரா இளைஞர் சங்க தலைவர் கோபிநாத்; தன்னுரிமை மனமகிழ் மன்றத்தின் ராஜசேகர் உட்பட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மலர் துாவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.அரண்மனை சீனிவாசன் தலைமையில் திருக்குறள் முற்றோதல் நடந்தது.
33 minutes ago
1 hour(s) ago