உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லடாக்கில் பரிதாபம் வெள்ளத்தில் சிக்கி ராணுவத்தினர் 5 பேர் பலி பயிற்சியின் போது நேர்ந்த சோகம்

லடாக்கில் பரிதாபம் வெள்ளத்தில் சிக்கி ராணுவத்தினர் 5 பேர் பலி பயிற்சியின் போது நேர்ந்த சோகம்

லே: லடாக்கில் பயிற்சியின்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஐந்து ராணுவ வீரர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் உட்பட எல்லையோர மாநிலங்களில், நம் ராணுவ வீரர்கள் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் அவர்கள் அங்கு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு - காஷ்மீரின் லடாக் எல்லையில் மந்திர்மோர் பகுதியில் நம் வீரர்கள் நேற்று வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். எல்லை கோட்டின் அருகே உள்ள ஷியோக் ஆற்றை, டி - 72 பீரங்கி வாகனத்தில் கடக்கும் பயிற்சியை அவர்கள் மேற்கொண்டனர். அதிகாலை 1:00 மணிக்கு நடந்த இந்த பயிற்சியின் போது, ஆற்றின் நீர்மட்டம் திடீரென மளமளவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ராணுவ வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில், அதிலிருந்த ஒரு ஜூனியர் கமிஷன் அதிகாரி உட்பட ஐந்து வீரர்களும் உயிரிழந்தனர். பல மணி நேரப் போராட்டத்துக்கு பின் அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த துணிச்சலான வீரர்கள் நம் தேசத்துக்கு அளித்த முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். 'அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். துயரமான இந்த நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது' என, கூறியுள்ளார். 'விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த நாடும் துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினருடன் உள்ளது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் வீரர்களின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை