உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன் தொல்லையால் விபரீத முடிவு; குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை

கடன் தொல்லையால் விபரீத முடிவு; குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானாவில், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தம்பதி, தங்களது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தெலுங்கானாவின் ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள ஹப்சிகுடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர ரெட்டி, 46; இவரது மனைவி கவிதா, 36. தம்பதிக்கு, ஒன்பதாம் வகுப்பு படித்த மகளும், ஐந்தாம் வகுப்பு படித்த மகனும் இருந்தனர். தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த சந்திரசேகர ரெட்டி, கடந்த ஆறு மாதங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். கடனை செலுத்த முடியாமல் தவித்த அவர், மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சந்திரசேகர ராவை, அவரது உறவினர் மொபைல் போனில் நேற்று முன்தினம் இரவு பலமுறை அழைத்தார்; அவர் எடுக்கவில்லை. வீட்டுக்கு வந்து பார்த்த போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, படுக்கை அறையில், இரு குழந்தைகளும் இறந்து கிடந்தனர். மற்றொரு அறையில் சந்திரசேகர ரெட்டியும், கவிதாவும் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். நான்கு பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகள், மகனை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, சந்திரசேகர ரெட்டி, கவிதா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். அதிக கடன் தொல்லை மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் தற்கொலை செய்ததாக, சந்திரசேகர ரெட்டி எழுதிய கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

கத்தரிக்காய் வியாபாரி
மார் 12, 2025 17:24

இந்தியாவில் இன்று எத்தனையோ வேலைகள் உள்ளன. உழைக்கணும்னு மனம் இருந்தால் போதும்.


Kannan Palanisamy
மார் 12, 2025 13:29

குடும்ப தலைவி ?


ram
மார் 12, 2025 12:58

சரியான மன நோயாளிகளா இருப்பான் போல, அவனவன் வங்கியை ஏமாத்தி கோடி கோடியாக திருடி விட்டு foreign போய் ஜாலியாக இருக்கிறார்கள் என்ன கடன் தொல்லை ஊரைவிட்டு வேறு ஊருக்கு யாருக்கும் தெரியாமல் போக வேண்டியதுதானே.


M.Mdxb
மார் 12, 2025 12:48

குடும்ப தலைவர் செய்யும் சிறு தவறு மனைவி மற்றும் குழந்தைகள் வாழ்கை எதிர்காலம் எல்லாம் ??? ஆழ்ந்த இரங்கல்


Natchimuthu Chithiraisamy
மார் 12, 2025 11:34

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வேணும் என்று இன்றைய இளைஞர் துடிக்கின்றனர். படிப்பு மாஸ்டர் டிகிரி அந்த பாடம் பற்றி மற்றும் வேலை பற்றி எதுவும் தெரியாது. சம்பளம் வேணும் இல்லை சாவு என்பது முன்னோர் சொத்தில் வாழ்பவர்கள் எடுக்கும் முடிவு.


aaruthirumalai
மார் 12, 2025 10:48

இருப்பதை வைத்து வாழ வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இப்படி இரண்டு மூன்று குடும்பம் உள்ளது. வேறு ஏதாவது காரணமா என்பதை விசாரிக்க வேண்டும்.


अप्पावी
மார் 12, 2025 08:55

வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்குதுன்னு நேத்திக்கி ஒரு மின்ஸ்ட்டர் அடிச்சு உட்டாரே கிவாலு.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 12, 2025 08:38

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.. ஒரே பணி / தொழில் மட்டும் அறிந்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்று புரிந்துகொண்டேன் ...


நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 07:10

அந்த குழந்தைகளை பார்க்கையில் மனம் வலிக்கிறது, நமது கல்வி முறை இப்போதாவது மாற்றப்படும்?


Svs Yaadum oore
மார் 12, 2025 06:18

கந்து வட்டி தொல்லையால் தமிழ் நாட்டிலும் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்குது .....லஞ்ச ஊழல் போலீஸ்....கடன் கொடுத்தவன் வீடு தேடி வந்து கேவலமாக பேசுவது ....காசு வாங்கி வோட்டு போடும் மக்கள் உள்ளவரை மிக சோக சம்பவத்திற்கு விடிவு காலமில்லை ...


சமீபத்திய செய்தி