உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டோ மீது லாரி மோதி 2 பேர் பலி; 5 பேர் காயம்

ஆட்டோ மீது லாரி மோதி 2 பேர் பலி; 5 பேர் காயம்

ஷாஜஹான்பூர்:உ.பி., மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் செஹ்ராமாவ் அருகே நேற்று காலை, அதிவேகமாக வந்த லாரி, முன்னால் சென்ற டிராக்டர் டிராலி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்தது. அதைத் தொடர்ந்து தாறுமாறாக ஓடிய லாரி, எதிரில் வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த 7 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், ஹரிபால்48, ரமாகாந்த்,35 ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி