வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அவனது கட் செய்ய வேண்டும்
நீதி கிடைக்காது...
இவர்கள் வாழ தகுதியுள்ளவர்களா என்பதனை நீதிபதி உணர்ந்து நீதியை வழங்கவேண்டும்
மூணாறு:இளம்பெண்ணை தனியார் லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிபெரியாறு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் குமுளியில் படித்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த பிரிஜித், 26, பிப்., 11ல் குமுளியில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய்க்கு உடல் நிலை சரி இல்லை எனவும், அவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு பெற்றோர் கூறியதாகவும் தெரிவித்து அழைத்துச் சென்றார்.டூ - வீலரில் அப்பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ரோஜாப்பூ கண்டம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அறையில் பிரிஜித் நண்பர் அரணக்கல்லைச் சேர்ந்த கார்த்திஷ், 25, இருந்தார்.இருவரும் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர். எதிர்த்த பெண்ணை அடித்து துன்புறுத்தி, பலாத்காரம் செய்து, அதை மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும், பதிவு செய்த ஆபாச வீடியோவை வெளியிடவோம் எனவும் மிரட்டி பெண்ணை வீட்டில் விட்டனர்.நடந்த விபரத்தை அப்பெண் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் புகாரின்படி, குமுளி போலீசார், பிரிஜித்தை சிவகங்கையிலும், கார்த்திஷை ஓசூரிலும் கைது செய்தனர்.
அவனது கட் செய்ய வேண்டும்
நீதி கிடைக்காது...
இவர்கள் வாழ தகுதியுள்ளவர்களா என்பதனை நீதிபதி உணர்ந்து நீதியை வழங்கவேண்டும்