உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரண்டு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

இரண்டு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

ரஜோரி, ஜம்மு - காஷ்மீரின் எல்லை பகுதியில் ரஜோரி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவுவதை தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்சோரா பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.இதற்கிடையே, அப்பகுதியில் நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த இரண்டு பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நம் ராணுவ வீரர்களும் பதிலுக்கு சுட்டனர். இதில், இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.அவர்களின் உடைமைகளை சோதித்தபோது, இரண்டு ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல் உட்பட ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் இருந்தன. அவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி